Skip to main content

Posts

Showing posts from July 2, 2017

படைப்பாளியாய்..

ஒரு பெண் அங்கீகாரம் பெற.. வாசகசாலை பேட்டியில் செந்தில் அவர்களின் 'உள்ளே கனலும் நெருப்பு' சற்று யோசிக்கத்தான் வைத்தது. இதனை எழுதும் கட்டாயத்திற்குள்ளும் என்னை தள்ளியது எனலாம். "தமிழில் எழுதத் தெரிந்தால் அவர் எழுத்தாளராகிவிடும் சூழ்நிலையின் தொடக்கப்புள்ளி. ஃபேஸ்புக்கில் ’மொண்ணை’ வரிகளுக்கு இடப்படும் நூற்றுக்கணக்கான விருப்பக்குறிகள் தன்னைக் குறித்த மிகுதியான கற்பனைகளுக்கு வழிகோலுகின்றன போலும்." இதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதுபோலவே இங்கு நிறைய உள்ளன. இம்மாதிரியான விஷயங்களில், ஒரு சிறு கோபம் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியம், அது ஒரு மகாசமுத்திரம். கொட்டிக்கிடக்கும் எழுத்துகளில் யாருடையதை நல்லதென்றும் அல்லதென்றும் வல்லமை வாய்ந்ததென்றும் பொல்லாமை பேசுவதென்றும் சொல்ல? சமூகத்தின் மூலையில் கிடந்த சாராம்சங்களை எல்லாம் எழுத்தாக்கி வாசகனை யோசிக்கவைத்து அறிவை புரட்டிப்போட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் இலக்கியம் என்றும் அது ஒரு மாபெரும் தேவை என்றும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை படைத்தவர்கள் எல்லாம் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்களா என்றால்

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ