Skip to main content

Posts

Showing posts from February 12, 2012

மகிழ்ச்சி.....

           பகிர்வதில்தான் உள்ளது......                 என் பதிவுலக நண்பரான ரமணி அவர்கள் தனக்கு கிடைத்த ' லீப்ச்டர்' என்கிற இளம் வலைபதிவர்களுக்கு வழங்கும் ஜெர்மானிய விருதினை ஒரு அங்கீகாரத்தை தனக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறார். அதில் என் வலைப்பூவும் ஓன்று என்பதில் மகிழ்ச்சிதான். நண்பர் ரமணிக்கு என் நன்றிகள்.....                   மேலும் இந்த விருதின் அடையாளமே இதை மேலும் ஐவருக்கு பகிர்ந்தளிப்பதுதான். எனக்கு பிடித்தமான ஐந்து இளம் வலைப்பூக்களுக்கு (200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைப்பூக்கள் ) பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்....அவர்களும் இதை ஐந்து பதிவர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அதிகமான வலைப்பூக்கள் அறிமுகபடுத்தபடுகிற வாய்ப்பும் அமைகிறது.  இந்த விருதின் விதிக்கு ஏற்ப,  ஐந்து இளம் பதிவர்களுக்கு  வழங்கிடுமாறு  தங்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இவர்கள்தான் : திரு மயில்வாகனா அவர்களின் முல்லைவனம்  ஆதிமனிதன் அவர்களின் ஆதிமனிதன்  உத்தமபுத்திரா அவர்களின் தமிழ்க்கவிதைகள்  நூர் முகமது அவர்களின் நம்ம ஊர்  பாபு நடேசன் அவர்களின்

சித்திரங்கள் பேசும்.....

சித்ரகலா அகாடமி...... 34வது ஓவிய கண்காட்சி  கஸ்தூரி சீனிவாசன் கலை அரங்கம், கோவை  பிப்ரவரி 15 முதல் 19 வரை  அந்த அரங்கம் ஓவியங்களின் வண்ண கலவைகளை உள்வாங்கியிருந்தது சித்திரங்களால் தத்துவரூபமாகி போயிருந்தது  தூரிகைகளின் அட்டகாசங்களும்  வண்ணங்களின் வீச்சுகளுமாக  தடுக்கினால் மாடுகளும் தென்னைகளும் நிமிர்ந்தால் வானமும் மலையுச்சியும்  காதலில் கண்ணனும் ராதையும்  ஒத்தையடிசாலையில் மாட்டுவண்டிகளும்  என்ன ஒரு இனிய விரிதல் கண்முன்னே  நிஜங்களா இவை? இல்லை..... தூரிகைகளின் நிழல்கள்..... வெளிவர மனதில்லை ஓவியகூடத்தைவிட்டு... இவையெல்லாம் நம் வீட்டின் சுவர் ஆகாதா என்ற ஏக்கம்... சிறு குழந்தைகள் கூட பெரிய ஓவியர்களான அதிசயம்.... ஓவியங்கள் கூட நம்மை அழகாக்குமா... வண்ணங்கள் நமக்கு வானவில்லை காட்டுமா.... பார்த்துவர ஆசைப்பட்டு போனேன்..... ஆச்சிரியமாய் பார்த்துவிட்டு வந்தேன்..... கூடுதல் தகவல்  சித்ரகலா அகாடமியில் கடந்த 34 வருடங்களாக ஞாயிறுதோறும் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கிறார்கள்.......  தொடர்புக்கு : 9363145521 ; 9894149275  சில ஓவ

இதயம்.....

காலி இல்லை........ art by me...... சின்ன சின்ன பூக்களில் சிதறி கிடக்கும் காதல் பட்டாம்பூச்சியின் சிறகுகளில் படபடக்கும் காதல்  வானவில்லின் வண்ணங்களில் தெளித்திருக்கும் காதல்  கடற்கரை ஓரங்களில் களித்திருக்கும் காதல்  கோவில் சிலைகளில் சித்திரமாய் காதல்  கவிஞர்களின் கற்பனையில் காவியமாய் காதல்   அனைத்து இடங்களிலும் காதல்  அவளின் இதயத்தை தவிர...