Skip to main content

Posts

Showing posts from August 19, 2018

கதை வாசிப்பு..

சிறுகதை வாசித்தல்  கதை சொல்லுதல் என்பது தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்வு. நமது வீட்டு வயதானவர்கள் முதல் ஊரில் இருக்கும் பெரியவர்கள் வரை நமக்கு அருமையான கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள்.  கொஞ்சம் வித்தியாசமாக கதை வாசித்தல் என்னும் நிகழ்வை நான் யூ டியூபில், YouTube, காணொளிகளாக செய்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் நிறைய கதைகளை வாசித்திருக்கிறேன் யூ டியூபில். இப்போது தமிழில் செய்கிறேன். என் தளம்  கதை வாசிப்பு  Kathai Vaasippu Subscribe பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள், சிறுவர் கதைகள் முதல் மொழிபெயர்ப்பு கதைகள் வரை வாசிக்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வரவேற்கிறேன். ஏதாகினும் குறைகள் இருப்பின், அல்லது யாருடைய சிறுகதையை வாசிக்க விரும்பினாலோ சொல்லலாம்.  வாசிப்போம்.. வாசிப்பை என்றும் நேசிப்போம்..  சில காணொளிகள்  நாஞ்சில் நாடன் அவர்களின்  'தேர்தல் ஆணையத்திற்கு திறந்தவெளிக்கடிதம்' சிறுகதை வாசிப்பு  https://www.youtube.com/edit?o=U&video_id=7bCoUheywJU எஸ் ரா அவர்களின்  'நீங்க அப்புவைப் பார்

என் சமையலறையில்..

கத்தி தினம்.. இன்னைக்கு கத்தி தினம்னு (National Knife Day) கேள்விபட்டேன். கத்தி என்றாலே சமையலறை பயன்பாடுதான் முதன்மைபடுத்த படுகிறது நமது நினைவில். அது மட்டும் நினைவில் வந்தால் போதும் என்கிறது அறிவும். முன்பெல்லாம் சமையல் கத்திகளின் மீது அத்தனை வேறுபாட்டு சிந்தனை இருந்ததில்லை எனக்கு. நாமெல்லாம் அருவாமனைதானே காய் நறுக்க, மீன் செதில் உரிக்க பயன்படுத்தினோம். அருவாமனையின் பயன்பாடு நம் வாழ்வில் இருந்து பெரும்பாலும் காணாமல் போய்விட்ட ஒரு காலகட்டத்தில், cutting board, knife, cutter போன்ற ஆங்கில சொற்கள் சமையலறைக்குள் நுழையத் தொடங்கின. நானெல்லாம், வரிவரியாய் தடம் விழுந்திருக்கும் எனக்கு மூத்த பெண்களின் விரல்களைப் பார்த்து பயந்து  அருவாமனையில் காய் வெட்டுவதை நிப்பாட்டினேன். கத்தி பயன்படுத்த தொடங்கினேன். அதன்பிறகுதான், கத்தியில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது தெரிய தொடங்கியது. நான் சைவவாதி என்பதால், கோழிக்கறி அறுக்கும் கத்திகளை (Boning knife, Carving knife) என் பையன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான். Bread Knife, Mincing knife என்பதையெல்லாம் என் கிறித்துவ தோழியிடம் கேட்டு தெரி