Skip to main content

Posts

Showing posts from December 9, 2012

இப்போ ஓகே....

இரவின் மிச்சங்களை மறந்துவிட்டு காலை குளிரில் குளித்து ஒரு ரோஜாவை கிள்ளி சூடி சேலைக்கு சரியாய் பொட்டிட்டு பேருந்தில் உட்காரும் போது ஞாபகம் வந்தது காதில் இருப்பதை குளியலில் கழட்டியது கைப்பையில் துழாவினால் மாட்டியது நீல கல் வைத்த டிராப்ஸ் மஞ்சள் கலர் சேலைக்கு நீல கல் தோடா... இவ்வளவு காலையில் பேன்சி ஸ்டோர் திறந்திருக்காதே... யோசனையாய் கையில் உருண்டு கொண்டிருந்தது கம்மல்... சட்டேன்று சேலையை கவனித்தால் மஞ்சளில் அங்கங்கே நீலமும் சிவப்புமாய் சிறு பூக்கள் சின்னதாய் ஒரு சந்தோஷம் சிறகடித்தது இப்போது நீலமும் மஞ்சளும் சமாதானமாய் என் காலையும் இனிதாய்....

நடிகை....

சிறு இழை கூட பிசிறில்லாமல்   புருவங்களை திருத்தி  கண்களில் காஜலும்  உதடுகளில் பியர்ல் ஷேடும் கையில் ஐபோனும்    இறங்கிய லோ ஹிப்பும்  ஹை ஹீல்ஸுமாக  நீ குழந்தைகள் தினம்  கொண்டாட சென்ற இடம்   அனாதை இல்லமாக  அமையாதிருந்திருக்கலாம்... உன்னால் இன்னும் எத்தனை  பெண் பிள்ளைகள் பட்டணம் வந்து  படம் காட்ட போகிறார்களோ  தெரியவில்லை...  அந்த இல்லத்தின்  ரசம் போன கண்ணாடிக்குதான் தெரியும்....

பக்கத்து வீட்டு ஆண்கள்...

தீபாவளிக்கு முந்திய நாள் நிறைய நண்பர்கள், தோழிகள் என்று வழக்கம் போல் வாழ்த்துக்கள்....குறுஞ் செய்திகள்..என்று என் மொபைல் அடுப்படியிலே என்னுடன் சமைத்துக் கொண்டிருந்தது.... அப்படிதான் புதிதாக ஒரு எண்ணில் இருந்து அழைப்பு. எடுத்து ஹலோ சொன்னால் "நான்தான்" என்று பதில். நானும் விடாமல் "நாந்தாங்க பேசுறேன்" என்க, மறுபடியும் அதே பதில். எரிச்சலாகி நான் போனை ஆப் செய்ய போகையில் "நான்தான் சந்தான ராஜ்.." என்று பெயர் சொல்ல, எனக்கு அந்த ஆணின் குரலை தெரிந்துகொள்ள முடியவில்லை. நான் யோசிக்க தொடங்கினேன் யாராக இருக்கும் என்று. "முன்னாடி இருந்தீங்களே பல்லாவரத்தில், அங்க உங்க பிரென்ட்" என்று சொல்ல....ஞாபகம் வந்தது.... ஆறு வருடங்களுக்கு முன் அங்கு இருந்த போது இந்த மனிதர் பக்கத்து வீட்டுக்காரர். இரண்டு கல்லூரி போகும் பிள்ளைகளின் அப்பா. அந்த அம்மா ஒரு விவரமாய் பேசும் ஒரு அப்பாவி. அவர் நல்லவர் என்று நம்பி கொண்டிருந்த ஜீவன். முதலில் நானும் அப்படிதான் நினைத்திருந்தேன். அந்த மனிதர் டூட்டி முடிந்து வந்ததும் மாடியில் ஓய்வு எடுப்பார். நாங்கள் இருந்த