Skip to main content

Posts

Showing posts from July 28, 2013

என்னைக் கடந்து...

என்னைக் கடந்து நடந்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்... சின்ன ஜரி தெளித்த பட்டும் வெள்ளை வேட்டியும் பட்டு சட்டையுமாய் அவளும் அவனும்... நெற்றியில் விழும் மல்லிகைக் கூந்தலை தள்ளிவிடும் கை நளினமும் அந்த பூங்கொடியைத் தொடாமலேத் தொட்டு சாய்ந்தக் கோடான அவனின் நடையும்... சின்னதான அவனின் உதட்டசைவுக்கும் குறும்பை கண்களில் தேக்கிய   அவளின் சிறு இதழ் விரிந்த சிரிப்பும்... காட்டியதே புதுமணம் தான் என்பதை...

இரவின்...

எங்கோ கேட்கும் பல்லியின் குரலுக்கு துள்ளும் சில்வண்டு உயிர் நிலைக்க இருட்டின் சுவற்றில் அப்பிக் கொள்கிறது குரல் மூடி தவமிருக்கிறது பகலுக்காக... இன்னுமொரு அழைப்பு காற்றில் இப்போது துணையிடமிருந்து... பதில் எழுப்ப முனைகையில் எச்சரிப்பு அருகிலிருந்து  அமைதி காக்கவே ஒரு தவிப்பு அதற்கு  தொடரும் துணையினது அழைப்பு  காரைப் பெயர்ந்த சுவற்றில் குரலின் திசை தேடி நகர  மிருக வாசனை அருகே நுகர  துள்ளி விழுந்தது தரையில்...  கொல்லும் பயம் நகரவிடாமல்... கோரைபாயின் வாசம் அருகில் ஒடுங்கிக் கொண்டது அதனுள்... நெருக்கமாய் பாயின் முனகல்கள்  ஏக்கமாய் ஒரு இரவு...    

குளிரின் ஊதல்...

கம்பளியில் தலைநீட்டி தூங்கியவனை தொட்டது உள்ளிழுத்தான் முகத்தை...  கம்பளிக்குக் குளிர்ந்து போனது... நடந்துக் கொண்டிருந்த பெண்ணின்  சேலை விலக்கிப் பார்த்தது  சட்டென்றுக் கோபப்பட்டாள்... ஆடு பத்தி வந்தவன்  அதன் வருகை உணர்ந்து  பீடி பற்றத் தொடங்கினான்... வண்டி மாடுகளின்  மூச்சுக் காற்றும் குளிர  மூக்கணாங்கயிற்றின் மீது உரசிக் கொண்டன... நானும் ஆடையாய் போர்த்தியிருக்க  உன் மூச்சுக் காற்று நான்தான் என  நகையாடிச் சென்றது....