KOVAI BLOGGERS ASSOCIATION
Regd No :370/2012
கோவை பதிவர்கள் சங்கம்
ஒரு வயது முற்றுப் பெற்று
இரண்டாம் வயதின் ஆரம்பம்...
எங்களை வாழ்த்தியவர்கள் ஏராளம்
இருந்தும் இன்னும் வளர காத்திருக்கிறோம்...
பெயரிலேயே கோவையைப் பதித்து
நண்பர்கள் சிலராய் நாங்கள் சேர்ந்து தொடங்க
இன்னுமாய் வந்து இணைந்துக் கொண்டார்கள்
அனேகம் பேர்...
கோவை பதிவர்கள் சங்கம்தான்
பதிவர்களுக்கான முதல் சங்கமும் கூட
அதில் சற்று பெருமையும்
நிறைய உவகையும் உண்டு...
பெண்ணென்றும் ஆணென்றும் பேதமில்லாமல்
நட்பு என்னும் கைக்கோர்த்து
புன்னைகையை மட்டுமே பரிமாறி
சேவை உள்ளத்துடன்
இணைந்து பணியாற்றி வருகிறோம்...
தோப்பு என்னும் கூட்டமைப்பு கொண்டு
தொண்டுகள் பல ஆற்றி வருகிறோம்
- உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியது.
- இன்று கோவை PSG மருத்துவமனையில் இருதய வால்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தினம் என்கிற 65 வயது பெண்மணிக்கு A + ரத்தம் 4 யூனிட் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மிக நலமாக இருக்கிறார்
- கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள 150 ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கியது
- ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர்க்கான மனநோய் காப்பகத்தில் அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது
- கோவை உக்கடம் சரகத்திற்குட்டப்பட்ட முஸ்லீம் மஜீத் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் என்பவரின் மூலம் அவர்கள் சமூகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்பட்டது.
- அதே போல் டெல்லி தமிழ்க்குடில் அமைப்பால் அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட பொது நூலக கட்டுமான பணிக்கு நம் அமைப்பின் மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது.
- கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தல்
- கோவை பதிவர்கள் பிரசுரத்தின் வாயிலாக நூல்கள் வெளியிடுதல்
இன்னுமாய் உங்கள் அனைவரின் ஆசியுடன்
சமூகம் சிறக்க சேவைகள் பல செய்யவே
விழைகிறோம்...
எங்களுடன் இணைந்து பணியாற்றி வரும்
இனியும் இணைந்து பணிபுரிய விரும்பும்
அனைத்து நண்பர்களுக்கும்
எங்களின் அன்பும் நன்றியும்...
KOVAI BLOGGERS ASSOCIATION
Regd No :370/2012
இந்தியாவின் முதல் வலைப்பதிவர்களுக்கான
சங்கம் தோற்றுவித்தது நம் கோவையில் தான்.
வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி தனபாலன்...
Deleteவாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் தோழி
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteவாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி உங்களுக்கு...
Deleteஅருமையான முயற்சி..எல்லா மாவட்டங்களிலும் பரவட்டும்..
ReplyDeleteஎங்களின் உதவும் மனப்பான்மை உங்களின் இந்த ஊக்கத்தால் மேலும் உயரும்...நன்றி உங்களுக்கு...
Deleteசங்கம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDelete