Wednesday, 27 March 2013

கடந்து.....




சல்லடையாய் போயிருந்த அந்த மேகம்
வசிகரிக்கும்படி இருந்தது....
வானத்தை இப்புறமும் அப்புறமுமாய் காட்டியது...

மழை விடுத்த வெண்மையாய்
கண்முன்னே காற்றாடியது...

பயணித்துக் கொண்டேயிருந்தது
நிற்கச் சொல்ல மனமுமில்லை...
சொன்னால் நின்றிருக்கும் என்பதிலும் விருப்பமில்லை...
பதித்த பார்வையின் ஓரமாய்
சமுத்திரம் கடந்து
வேகமாய் எங்கோ சென்றது....  

12 comments:

  1. பயணித்துக் கொண்டேயிருந்தது
    நிற்கச் சொல்ல மனமுமில்லை..

    கடந்து பயணிக்கும் மேகம் அழகு ..!

    ReplyDelete
  2. தளத்தை விட்டுச்செல்ல மனமில்லை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  3. //சல்லடையாய் போயிருந்த அந்த மேகம் வசிகரிக்கும்படி இருந்தது....//

    அருமையான ஆரம்பம்.

    //பதித்த பார்வையின் ஓரமாய் சமுத்திரம் கடந்து வேகமாய் எங்கோ சென்றது....//

    நல்லதொரு அழகான நினைவலைகளுடன் கூடிய இனிமையான முடிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ம்ம்ம்.. அருமை கவிதை மேடம்

    ReplyDelete
  5. மேகம் சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை கடப்பது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன?வாழ்க்கையும் வாழப்பட்டுக் கொண்டேதான் போகிறது.
    உலகம் உருண்டை அல்லவா ..நீங்கள் நினைக்காவிட்டாலும்,நிற்க சொல்ல மனம் இல்லாவிட்டாலும் சல்லடையாய் போனாலும் வேகமாக பயணித்தாலும் வாழ்கையின் இன்ப துன்பங்கள் போல அந்த நிகழ்வுகள்(மேகங்கள்)கடந்து போனாலும் மீண்டும் வரும் அருமையான கவிதை அதைவிட அருமை கவிதைகேற்ற படம் ..

    ReplyDelete
  6. கவிதைக்கு பகிரபட்ட படம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றிப்பா...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....