வெற்றிடமாய் இருக்கும் இந்த நிமிடங்கள்
எனக்கே எனக்கானவை...
கவிதை வடிக்க எண்ணி
காகிதம் தொட்டால்
மை தொட்ட எழுதுகோலின்
எழுத்து கூட வெள்ளையாய்....
என் வண்ணங்கள் கூட
எண்ணத்தின் வழியை
தொடமுடியாமல்
எட்டிச் சென்றுவிட்டன....
ஒன்றுமில்லா ஒற்றை வீட்டுக்கு
என்னை இழுத்து செல்லும் அந்த பாதை
சருகுகளின் ஒதுக்கங்களில் ஒளிந்திருக்கிறது
கால்கள் நடை நிறுத்த கட்டளையிட
மனமோ பிரபஞ்சத்தின் மையம் நோக்கி...
சிலந்தியின் முணுமுணுப்பை தாண்டி
காய்ந்து போன ஓலைகளின் ஓட்டைகளின் வழியே
வெளிச்சங்களை சாப்பிட்டு கொண்டிருக்கும்
மேடான மண்தரையின் மீதமர்ந்து
காகிதம் தொட்டால்
அதில் வண்ணமாய் ஒரு கவிதை...
எழுத்தாய் ஒரு சித்திரம்...
காத்திருங்கள்...
வெறுமையின் வீட்டையும்
என் வசிப்பை வாசிக்கும் அளவுக்கு
மாற்றிவிட்டு வருகிறேன்....
படத்திற்கேற்ற கவிதையா...?
ReplyDeleteஇல்லை...
கவிதைகேற்ற படமா...?
உங்களுக்கே ஆச்சரியமாக இல்லை...?
காத்திருக்கிறேன்...
சீக்கிரம் வந்துடுங்க...
இன்னும் ரசிக்க வேண்டும்...
ஆஹா....நன்றி ...
Deleteநல்ல கவிதை, வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி...
Deleteகண்டிப்பாக அகிலா.... வெறுமையின் வீட்டையும் கவிதையை ரசிக்க வைக்கும் திறமை உங்கள் கவிதைக்கு உண்டு...
ReplyDeleteநன்றி எழில்...
Deleteசாதாரண மனநிலையில் வெறுமை என்னும் சொல் அந்த வெறுமையை நோக்கி நம்மை செலுத்தும் உந்துதலாக மாற்றிவிடும் அதை நேர்மறையாக மாற்றி சித்திரம் வரைந்து அழகோவியமாக மிழிரட்டும் ..உங்கள் எண்ணங்களும் கவிதைகளும்
ReplyDeleteம்ம்ம்ம்...நன்றி ராஜன்...
Deleteவசிப்பையும் வாசிக்கும் அளவுக்கு.... மிகமிக ரசித்தேன் இந்த வரிகளை! உங்களின் கவித்திறன் நிச்சயம் அதைச் செய்யும்! பிரமாதங்க அகிலா!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி கணேஷ்...
Deleteகவிதை சிந்தனைக்கு கவிதை அருமையாக இருக்கு
ReplyDeleteஅதற்கு தோதாய் படமும் வெகு அருமை
Deleteநன்றி....
Delete