Monday, 29 October 2012

குப்பைகள் குடும்பமாய்...





வண்ணங்களின் சாயலே இல்லாமல்
எண்ணங்கள் வெறுமையாய் இருக்க...

மனதின் ஓரத்தில் மட்டும்
குவிந்து போன குப்பைகள்....
அன்பு, பாசம், காதல், கடமை
கோபம், வெறுமை என்று குடும்பமாய்....

பிரித்து போட மனமில்லாமல்
சேர்ந்து கொண்டே இருக்க
மலைத்து போய் இருக்கிறேன்
எதை முதலில் சரி செய்யவென்று...

கைப்பேசியில் தோழி
அவள் கீழே விழுந்து
கால் பிசகி சந்தோஷமாய்
சயனித்திருப்பதை சொல்ல...
 
நமக்கு மட்டும் இப்படி நடப்பதில்லையே 
என்கிற நினைப்பு சேர்ந்து கொண்டது
அடுத்த குப்பையாய்...



8 comments:

  1. குவிந்துப்போன குப்பைகளை கொண்ட வரிகள் நல்லாருக்கு.

    அந்த படமும் சிம்பிளா அழகாயிருக்கு.

    ReplyDelete
  2. ”நமக்கு மட்டும் இப்படி நடப்பதில்லையே” என்ற ஆதங்கம் தேவையா?

    எதையும் தாங்கும் மனப் பக்குவத்தைப் பெற முயற்சிக்கலாம்தானே?

    கவிதை நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுமில்லை...வீட்டு வேலை செய்து அலுத்து போனதன் விளைவுதான் இந்த ரெஸ்ட் எடுக்கமாட்டோமா என்கிற புலம்பல்....நன்றி...

      Delete
  3. துன்பங்களை கூட ஏற்று வாங்கி நமக்கு வரவில்லையே என்ற உள்ளம் ..
    வரிகளில் அருமை அதைவிட படம் ..
    //குவிந்து போன குப்பைகள்....//அது என்ன எல்லா குப்பைகளும் தலைகுள்ளேயா இருக்கிறது
    கவிதைக்கு ஏற்ற படம்

    ReplyDelete
  4. திட்டமிட்டால் குப்பைகளுக்கு குட்-பை...

    ReplyDelete
    Replies
    1. எப்படி திட்டமிட்டாலும் தலைக்குள் குப்பைகள் குவிந்துகொண்டே தான் இருக்கிறது தனபாலன்....சில சமயங்களில் கெட்ட நினைவுகளை ஒதுக்குகிறோம்...பல சமயங்களில் நல்ல நினைவுகளை நினைத்து பார்ப்பது கூட இல்லை....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....