Wednesday, 31 October 2012

மழையின் தீண்டல்...





பாக்கு மரங்களிடையில்
பாயும் கம்பிகளாய் மழை...
சாய்க்க முடியாத சங்கடத்தில்
சரம்சரமாய் மணலில்....

நிழற்குடையின் மேல்
நிதர்சனமில்லாமல் மழை...
நிற்கிற மனிதர்களை தீண்டமுடியாமல்
குழிபறித்து மணலில்......

ஒத்தையடி சாலையில்
உக்கிரமாய் மழை...
குடையாய் சேலை தலைப்பு விரித்து
கூடையை தலையில் கமத்தி
விரசலாய் ஓடும் பெண்களை குறிவைத்து....

இந்த முறை வென்றது மழைதான்...
முக்காடிட்டவர்களை முழுவதுமாய் நனைத்து
மகிழ்ச்சியாய் மண்ணை தொட்டது....



12 comments:

  1. மழை மண்ணை மட்டுமல்ல.மனதையும் தொட்டது!

    ReplyDelete
  2. அருமையான வரிகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆகாஷ்...

      Delete
  3. ரசிக்க வைக்கும் வரிகள்...

    நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இந்த முறையில்லை எந்த முறையும் வெல்வது மழை பெண்ணாகத்தான் இருக்கும் தானும் அழகுற பெய்து நிலதின் மேனியையும் அழுக்கு அகற்றி அழகு படுத்தி செல்லும் மழையினை கவிதையாக படைத்த விதம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மழை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி....

      Delete
  6. அருமை.... நல்..வரிகள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பா...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....