வீட்டின் முற்றத்தின் மேல்
போட்டிருக்கும் கோலத்தின் மேல்
நட்டிருக்கும் ரோஜா செடியின் மேல்
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளின் மேல்
அங்கே அமர்ந்திருந்த என்னின் மேலும்
சிறு சிறு துளியாய் விழுந்து
நான்தான் மழையென பறைசாற்றினாய்...சரி..
நான் எழுதிக்கொண்டிருந்த
காகிதத்தின் மேலும் விழுந்து
என் கவிதையின் எழுத்துக்களை ஒற்றி எடுத்து
எங்கோ கொண்டு சென்றாயே...
எங்கு போய் தேடுவேன்
என் எழுத்துக்களை...
சொல்லிவிட்டு செல்.....
ReplyDeleteவணக்கம்
உலகெலாம் உன்றன் உயா்தமிழைச் சோ்த்து
நலமெலாம் நல்கும் மழை!
உண்மைதான் கவிஞரே .....
Deleteமழை நீரின் ஓட்டத்தில் மாலுமியில்லாத காகிதகப்பலின்
ReplyDeleteதடையில்லாத ஓட்டம் போல....
மழை களவாடிய எழுத்துக்கள் கவிதையாக....
கவிதையும் உங்கள் மழை படமும் அருமை ....
பாராட்டுக்கு நன்றி ராஜன்....
Deleteரசித்தேன்...
ReplyDeleteஇங்கும் இப்போது மழை...
மூன்று நாட்களாகவே மழை இங்கு....நன்றி தனபாலன்....
Deleteநன்று மிக அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
http://sankar-information-security.blogspot.com/
நன்றி உங்களுக்கு....
Delete