பெண்ணின் நியாயங்கள்....
தோசைக்கு அரைத்திருப்பாள்
ஆனால் சப்பாத்தி சுடுவாள் - கேட்டால்
மருமகளுக்கு பிடிக்கும் என்பாள்...
மருமகளை பிடிக்காவிட்டால் அவளையே
கேட்டுக்கு வெளியே நிறுத்திவிடுவாள்...
உங்க தங்கச்சிக்கு வரன் பார்த்து
கட்டி வச்சது போதாதா
அவ பெண்ணுக்குமா என்பாள்
'அண்ணி' என்ற அன்பு குரலில்
அவளுக்கு நம்மளை விட்டா யாரு என்று
இவளே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாள்...
தங்கம் விக்கிற விலைக்கு
இனி தங்கமே வாங்க மாட்டேன்
இருப்பதே போதுமென்பாள்
மறுநாளே டிவியில் பார்த்த தள்ளுபடிக்காக
ஒரு காது தோடாவது எடுத்து வருவாள்
'மூட்டுவலி யார் காதில் விழுது' என்பாள்
டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி வந்தால்
'நேத்துதானே எண்ணெய் போட்டேன்
ஒன்னையும் கவனிக்கிறதில்லை' என்பாள்
ஆண்கள் பாவம்தான்...
தனக்குத்தானே அவள் பேசிக்கொள்வதை எல்லாம்
தன்னிடம்தான் சொல்கிறாள் போல என்றெண்ணி
அவளை அசத்த முயற்சி செய்ய,
அவளோ அவ மனசில என்ன நினைக்கிறாளோ
அதை மட்டுமே அவன் நிறைவேற்ற வேண்டும்
என்று ஆசைபடுவாள் என்பது
இவர்களுக்கு தெரியவா போகிறது....
ஆண்கள் பாவம்தான்....
இப்போதாவது உண்மையை சொன்னீர்கள்
ReplyDeleteஹாஹா....எப்போதாவது இப்படி....
Deleteநன்றி....பதித்திருக்கிறேன்
ReplyDeleteநன்றி....பதித்திருக்கிறேன்
ReplyDeleteஉண்மைதான் பாவப்பட்ட ஜென்மெங்கள் ஆண்கள்
ReplyDeleteம்ம்ம்....சில சமயங்களில் மட்டும்....
Deleteஅப்பாடா... ஒருத்தரிடமிருந்தாவது ஒரு சின்ன வெகுமதி கிடைத்தது...
ReplyDeleteஆஹா...என்ன சந்தோஷம் தனபாலனுக்கு....Enjoy...
Deleteபெண்களின் அன்புள்ளத்தை
ReplyDeleteஅழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஆண்கள் பாவம் இல்லை.
இதையெல்லாம் தெரிந்தும்
கண்டும் காணாதது போல் இருப்பார்கள்.
அதையும் ஒரு கோர்வையாக நீங்கள் எழுதி இருக்கலாம் அகிலா மேடாம்.
மஞ்ச தண்ணி தெளிசிட்டு ஆடு வெட்டுறதில்லையா?...கொஞ்சம் சந்தொஷபட்டுகிட்டும்...அப்புறமா பார்த்துக்கலாம் அருணா...
Deleteஒரு பெண் ஆண்களைப்பற்றி பரிதாபப்படுவது புல்லறிக்க வைக்கிறது.
ReplyDeleteஉங்களையும் கொஞ்சம் நாங்க கவனிக்கனுமில்லையா?
Deleteமற்ற எல்லாம் எனக்கு அறிமுகமில்லை .ஆனால் கடைசியில் சொன்னீர்களே பெண் மனதில் என்ன நினைப்பாளோ அதை ஆண் செய்ய வேண்டுமென நினைப்பாள் என்று அது நூற்றுக்கு நூறு சரி . நம் எண்ணங்களும் அவர்களின் செயல்பாடுகளும் வேறு வேறு என்பதால் இது நிறைவேற சாத்தியமே இல்லை அதனால் வரும் அன்புச் சண்டைகளுக்கு குறைவே இல்லை. நன்றி அகிலா. என்னை ஒரு சுய பரிசோதனை செய்ய உதவியதற்கு
ReplyDeleteஎன் சுய பரிசோதனை முடிந்ததால்தானே இப்படி எழுத முடிந்தது எழில்.....நன்றி...
ReplyDeleteநம் மனதில் நினைப்பது அவர்களுக்கு எப்படி தெரியும் அகிலா? முதலிலேயே சொல்லிவிடவேண்டும்: நாங்கள் வேண்டாம் என்றால் வேண்டும்; வேண்டும் என்றால் கட்டாயம் வேண்டும்;
ReplyDeleteபாவம் ஆண்கள் தான்!
ஹாஹா....சூப்பர் மேம்...கடைசி வரை நாம் இப்படியே இருப்போம்....
Delete