Friday, 3 February 2012

ஆதாயம் தேடும் பெண்களும்.....


அவதிப்படும் அண்ணன்களும்...


   பெரும்பாலும் பெண்கள் சுயநலவாதிகள்தான். அதை நானே மறுக்க முடியாது. பிறந்த நிமிடத்தில் இருந்தே இப்படித்தானோ என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். நெருங்கிய தோழிகளிடம் கூட தனக்கு வேண்டியதை மறைத்து வேண்டாததை சொல்வது, நட்பை தன் விருப்பு வெறுப்புக்காக குழி தோண்டி புதைப்பது, தனக்கு ஒரு ஆபத்து என்றால் தன் ஆண் நண்பர்களை வீட்டில் போட்டு கொடுப்பது,  தன அப்பா, அம்மா, அண்ணன், கணவன் என்று ஒருவர் விடாமல் தன சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்வது என்று ஏக நல்ல குணாதிசயங்கள் பெண்களுக்கு உண்டு.

      ஆட்டோ ஓட்டும் அவனை எனக்கு பல வருட பழக்கம். அவனுக்கு தகப்பன் இல்லை. தாயும் ஒரு தங்கையும்தான். அவனுக்கு வரும் வருமானத்தில்தான் தங்கைக்கு நகை 15 சவரன் போட்டு கல்யாணமும் அதன் பிறகு இரண்டு பிரசவமும் பார்த்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக கடன் வாங்குவதும் அதை அடைப்பதுமாக இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி போன ஒரு பாசக்கார அண்ணன் அவன். 

   இப்போது அவனுக்கு 38 வயது. திருமணத்திற்கு பெண் பார்க்க இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். வயதின் காரணமாக பல வரன்கள் தட்டி போக,  ஒரு வரன் மட்டும் கூடிவர ஏக கனவுகளுடன் இவனும் காத்திருக்க,  இவனின் தங்கை மட்டும் பெண் அழகில்லை என்று தட்ட பார்க்க, இதுவே போதும் என்று இவனின் அம்மா சொல்ல சம்மதித்திருக்கிறாள். 

    நிச்சயம் பண்ணலாம் என்று பெண் வீட்டார்கள் சொல்ல, 'அதற்கு அவசரம் வேண்டாம் என் இரண்டாவது பையனின் காது குத்து முடியட்டும். அப்புறம் பார்க்கலாம்' என்று இழுத்தடிக்கிறாள். காது குத்து என்றால் 20000 ரூபாயாவது செலவு ஆகும். கடன் வாங்கி அதை அடைத்து இவன் எப்போது திருமணம் செய்வது. இதைவிட பெரிய கூத்து என்னவென்றால் 'உனக்கு கல்யாணம் முடிந்தாலும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் செய்ய வேண்டியதை செய்து கொண்டிருக்க வேண்டும்' என்று நம் பாரம்பரிய கலாசாரதிற்கே உரிய சத்தியத்தை செய்ய சொல்கிறாளாம்.  மன உளைச்சலும் வேதனையுமாக கல்யாணமே வேண்டாம்னு அவன் சொன்னது என்னை ரொம்ப பாதித்தது.

      'உன் அம்மாவும் உன் திருமணத்தை ஆதரிப்பதால், யோசிக்காமல் திருமணம் செய்து கொள். வருகிறவளும் இருக்கிறவளும் இருவருமே சுயநலவாதிகள் தான். அவர்களே அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள். நீ கண்டு கொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார்.' என்று அவனுக்கு ஏகப்பட்ட அறிவுரை - நல்லதா கெட்டதா என்று மட்டும் கேட்காதீர்கள் - கூறி அனுப்பினேன். கொஞ்சம் தெளிந்திருந்தான். 

    இந்த வயதை தப்பவிட்டால் அவன் என்றுதான் குடும்பஸ்தன் ஆவது? அவனுக்கும் துணை, வாரிசு எல்லாம் வேண்டாமா? செய்துகொண்டே இருக்கும் அண்ணன் என்றால் சாகும்வரை உறிஞ்சலாமா? பெரும்பாலான பெண்களின் இந்த சுயநலம் என்னை வெட்கப்பட வைக்கிறது.

      தன் பிரசவ சமயத்தில் தாயை மாமியாரை பயன்படுத்தி கொள்வது அதன் பின் அடித்து விரட்டாத குறையாக வெளியே தள்ளுவது நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. இந்த மாதிரி பெண்கள் திருந்துவது மிக கடினம். திருத்துவதும் கடினம். 

    இந்த 'பாசமலர்' அண்ணன் தங்கை எல்லாம் திரைக்குதான் ஒத்து போகும். நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் சுயநலமே ஓங்கி நிற்கும்.


டிஸ்க் :   விதிவிலக்குகளும் இருக்கலாம். இல்லையென்று நான் சொல்லவில்லை.....11 comments:

 1. உண்மைதானோ? பாசமலர் சினிமாவில் மட்டும்தான் என்று சொன்னது. ஆனால் உண்மையில் பாசமுள்ள அண்ணன் தங்கைகள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. டிஸ்க் போட்டிருக்கேனே விச்சு....

   Delete
 2. முதல் பாரா மொத்தமும் சத்தியமான நிஜம்
  ஒன்றிரண்டு பேர் சரியாக இருக்க முயன்றாலும்
  உடன் இருக்கும் பெண் உறவுகள்
  அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை
  எனக்குத் தெரிய கணவனைஇழந்த தங்கை தனக்கு
  பிற்காலத்தில் பாது காப்பு வேண்டும் என்பதற்காக
  தன் தம்பிக்கு மன நிலை கொஞ்சம் சரியில்லாத பெண்ணாகப் பார்த்து
  திருமணம் செய்துவைத்ததையெல்லாம பார்த்திருக்கிறேன்
  படிக்க கஷ்டமாக இருந்தாலும்
  இதுதான் யதார்த்தம்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கூறி இருக்கும் விஷயம் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது....பெண்களின் பிடிவாதங்களும் சுயநலங்களும் ஆண்களைதான் வெகுவாக பாதிக்கின்றன.....நன்றி ரமணி....

   Delete
 3. //இந்த 'பாசமலர்' அண்ணன் தங்கை எல்லாம் திரைக்குதான் ஒத்து போகும். நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் சுயநலமே ஓங்கி நிற்கும்.//

  unmai.. vaalththukkal

  ReplyDelete
  Replies
  1. நன்றி சரவணன்......

   Delete
 4. ///வருகிறவளும் இருக்கிறவளும் இருவருமே சுயநலவாதிகள் தான். அவர்களே அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள். நீ கண்டு கொள்ளாமல் உன் வேலையை மட்டும் பார்.//

  வாவ்....மிக சரியான அறிவுரை அகிலாம்மா. பாராட்டுக்கள் உங்களுக்கு . நல்ல மனதில் இருந்துதான் நல்ல எண்ணம் பிறக்கும் என்பதை உங்கள் அறிவுரை நிருபிக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...நல்ல மனது, நல்ல எண்ணம்....
   உங்களை support பண்ணி எழுதியதலா.....
   உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன்...நன்றி....

   Delete
 5. தன் குழந்தைகள் பெரியவர்களாகும் வரை மாமியாரைப் பராமரித்துக் கொண்டு, குழந்தைகள் வளர்ந்ததும் விரட்டி விட்ட மருமகளைக் கண்டிருக்கிறேன் நான். அந்த நண்பருக்கு நீங்கள் சொன்ன அறிவுரை மிகமிகச் சரியானது தோழி!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் பெரிதாகும் வரையாவது பார்த்தார்களே...
   இப்போதிருக்கும் பெண் பிள்ளைகள் பிரசவம் முடிந்து தான் சற்று நிமிர்ந்த உடனேயே துரத்திவிடுகிறார்கள்....
   உங்கள் பகிர்வுக்கு நன்றி கணேஷ்....

   Delete
 6. மனிதர்கள் எல்லாருமே ஓரளவு சுயநலவாதிகள்தான். சிலர் இப்படி மிஞ்சிப்போய் விடுகிறார்கள். இல்லையென மறுக்க முடியாது.

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....