ஆற்றங்கரை நாகரிகங்கள் (இங்கிலாந்து)
~~~~~~~~~~~~~~~~
இன்றைய நூலக வாசிப்பின்போது, பிரித்தானியா நாட்டில் மனித குடியேற்றங்கள், பழைய கற்காலத்திலிருந்து (பேலியோலிதிக் (Palaeolithic)) தொடர்ந்தபோதும், அவ்வப்போது மனிதர்கள் இல்லாதிருந்து விடுபட்டு போன காலகட்டங்களும் இருந்திருக்கின்றன என்பதும், அவற்றிற்கான காரணங்களாக சொல்லப்படுவது, சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஆர்க்டிக் பகுதி பனிப்பாறைகள் உருகுதல், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் பனிப்பாறைகளால் உண்டான உடைதல்கள், இப்பிரதேசத்தில் மனிதனின் நிரந்தர குடியேற்றங்களில் தடைகள் இருந்துவந்தன என்பதே.
விவசாயம் பிரதானமாக இல்லாமல், வேட்டை தொழிலும், விலங்குகள் வளர்த்தலும் இங்கிருந்த மனித நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததற்கான காரணங்களும் இவைதான். மெசோலிதிக் எனப்படும் மத்திய கற்காலத்தில் தான் மனிதர்கள் பிரித்தானியாவின் வடக்காக நகர்ந்து ஸ்காட்லாந்தை நெருங்கினர். அதற்கு முன்பு வரை அப்பகுதியும் மனிதர்கள் வசிக்கும் தன்மையில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. பழைய கற்காலத்தின் முக்கிய நாகரிகமாக கருதப்படும் யூப்ரதீஸ், தைக்ரீஸ் நதிக்கரை நாகரீகமான மொசபத்தெமியா (Mesopotamia), நைல் நதிக்கரை நாகரிகமான மிஸிர் (Misr) நாகரிகம் போன்ற ஐரோப்பிய நாகரிகங்களின் பரவலைதான் பிரித்தானியாவும் கொண்டிருந்ததாக தெரியவருகிறது... இன்னும் சுமர், அக்காடியன், பாபிலோனியர்கள் நீரை உலகின் முதல் விதியாய் கொண்டது என்று இவர்கள் முதன்மைபடுத்தும் நாகரிகம் இவர்களுடையதாகவே ஆகியும் விடுவதைக் காணமுடிகிறது...
நதிகளைத் தேடிச்செல்லும்போது, இவ்வாறு நாகரிகங்களையும் சென்றடைய வேண்டியுள்ளது.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....