Friday, 10 March 2017

மகளிர் தினத்தில்..

ஆண்கள் 






‘என்னவெல்லாமோ எழுதுறியாம், உனக்கென்ன தெரியும் அதை பற்றி..’ – இது ஒரு கணவன் என்னும் ஆணின், மனைவி என்னும் பெண் குறித்த தெரிதலுக்கான கேள்வி என்றால், இல்லை என்பேன்.
‘உனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது. எதுக்கு லூசு மாதிரி எழுதுறே’ என்பதற்கான நாகரீக கேள்வி அது.


மனிதர்களையும் மனித மனங்களையும் அவர்களின் வாழ்வியல் விஷயங்களையும் பற்றி சமூகவெளிகளில் பேச பெண்ணுக்கு அனுமதி இன்னும் முழுதாய் கிடைக்கவில்லை என்பது வருத்தமே.


நிறைய மேடைகளில் பேசும்போது, ஆணுக்கு இணையாய் பெண்ணும் அமர்கையில் அவளுக்கு அந்த மேடையில் கிடைக்கும் மரியாதை தனித்துவம் வாய்ந்தது.


அப்படியான பிரபலங்களைக் குறித்து வீட்டில் தன் மனைவியிடம், ‘எப்படி பேசுறாங்க...அருமை..’ என்று சிலாகிக்கும் ஆண்கள் உண்டு. சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘நீயும் இருக்கியே, எதுக்கெடுத்தாலும் மூக்கை வடிச்சுகிட்டு..’ என்று சொல்வதும் உண்டு.
என் தோழிகளில் சிலர் அவர்களின் கணவர்களைப் பற்றி, ‘மரியாதை கொடுக்கிற மாதிரியும் மரியாதை கொடுக்காத மாதிரியும் இருக்கு..’ என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம், இப்போதெல்லாம் கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்கள் மேடைகளில் நிற்பதைக் காண்கிறோம். அதாவது அவ்வளவு உயர்ந்திருக்கிறார்கள்.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன், இதைவிட மிகக் குறைவான பெண்களே உயரத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் பழகிய ஆண்கள் ‘நம்ம மனைவி, வீட்டில் இருப்பதே மேல், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் வேலை செய்துகொண்டு..’ என்ற நினைப்பு அதிகமாய் இருந்தது. அதனால்தான், அந்த காலகட்டத்தில், பெண் பார்க்கும் படலங்களின்போது,‘பெண் படித்தால் குடும்பமே படித்தமாதிரி’ என்று பாரதியார் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டு, பெண் படிச்சிருக்கணும், ஆனால் வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னது அன்றைய ஆண் சமூகம்.

பெண்கள் நிறையப்பேர் உயர்ந்திருக்கும் இன்றைய சூழலில் ஒரு ஆணுக்கு பெண்ணை எவ்வாறு கையாளுவது என்பது புரிபடாமல் போகிறது. இது ஒரு Transistion Period அவர்களுக்கு.

தான் மிகுந்த அறிவாளியென காலம்காலமாக கற்பனை செய்துவைத்திருக்கும் ஆணுக்கு, வெளிவுலகில் கம்பீரமாய் நடமாடும் பெண்களைக் காணும்போது, ஒரு சுய அலசல் தேவையாகிறது. இந்த சுய அலசலில், தான் வெளியே சந்திக்கும் பெண்களை மட்டும் உயர்த்துவதா அல்லது வீட்டிலிருக்கும் இவளையும் உயர்த்துவதா அல்லது உயர்த்துவது மாதிரி பேசமட்டும் செய்வதா என்னும் குழப்ப மனநிலைக்குள் செல்கிறான்.

இந்த காலகட்டத்தில் முன்பில்லாததைவிட பெண் குறித்த புறம் பேசுதல், அவளின் பாலியல் ஒழுக்கம் குறித்த நிலையை just like that ஆக பேசிசெல்வது அதிகமாய் நிகழ்கிறது எனலாம்.


பெண்ணை போதைக்காகவும் குழந்தை வளர்ப்புக்காகவும் மட்டுமே பயன்படுத்திய ஆண் சமூகம், தன் படிமங்களை மாற்றிக்கொண்டு வளர்ந்துவந்தாலும், தான் வெளிவுலகில் பார்க்கும் பெண்களில் போதைக்கு உகந்து வருவாளா என்று உரசிப்பார்க்கும் குணம் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இணங்காத நிலையில், அப்பெண் குறித்த அவதூறுகளைப் பரப்ப தயங்குவதுமில்லை இந்த ஆண் சமூகம்.


‘நேரில் பார்க்க நல்லாயிருக்கமாட்டா..’
‘Full ஆ மேக்கப்..கிழவி..’
‘அவரு அந்தம்மாவை பற்றி பேசுவதிலேயே தெரிகிறது, இரண்டு பேருக்கும் லிங்க் இருக்குன்னு ...’ – இன்னும் முடிக்க கூசும் விஷயங்களைப் பேசுவது
‘பிள்ளை குட்டியெல்லாம் இங்கே விட்டுட்டு அப்படி என்ன சம்பாத்தியம்..’
‘அதுதான், பொம்பளைன்னு ஒரு அடையாள அட்டை இருக்கே.....’


இம்மாதிரியான பேச்சுக்களுக்கு மட்டும் இன்றுவரை ஆண்களிடம் முற்றுப்புள்ளியே இல்லை. அன்று பெண்கள் இதற்காக மூலையில் உட்கார்ந்து அழுதார்கள். கணவனின் கால் பிடித்து கதறினார்கள். தற்கொலை செய்துகொண்டார்கள். இன்று பெண்களில் பெரும்பாலோர் இந்த மூர்க்கமான பேச்சுகளை தட்டி உதறிவிட்டு தன் பாதையில் போய் கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஆண்களுக்கு புதிதுதான். தாங்கமுடியாமல் இன்னும் அதிகமாய் பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் சமன்படுவார்கள்.


பெண்களின் பாலியல் ஒழுக்கம் குறித்த பேச்சுகள் அன்று நிறுத்தப்படும். அதுவரை அதிகமாய் கவலைபடாமல், காத்திருப்போம்..







~ அகிலா..

12 comments:

  1. அருமையான ஆழமான
    அவசியமான்ப் பதிவு
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றாகப் போட்டுத் தள்ளுறியள்
    எதற்கும் உளமாற்றம் வேண்டும்

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை.....முன்பு மாதிரி இல்லாமல் இந்த காலத்தில் உள்ள புதிய தலைமுறை ஆண்கள் நிறைய மாறி இருக்கிறார்கள் மாறிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது உண்மையே ஆனால் அந்த சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கிறது ஆனால் காலப்போக்கில் அதில் நிறைய மாற்ற்ங்கள் ஏற்படும்...


    இந்த பதிவில் நீங்கள் சொல்ல மறந்தது ஒன்று உண்டு அது


    //இந்த காலகட்டத்தில் முன்பில்லாததைவிட பெண் குறித்த புறம் பேசுதல், அவளின் பாலியல் ஒழுக்கம் குறித்த நிலையை just like that ஆக பேசிசெல்வது அதிகமாய் நிகழ்கிறது எனலாம். //

    இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படிபுகழ் பெறும் பெண்களை கண்டு பொறாமைப்படும் மற்ற பெண்களும் மேலே நீங்கள் சொன்னமாதிரிதானே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..

    இப்படி சக பெண்களே அசிங்கமாக பென்களை பேசிக் கொண்டிருக்கிற காலத்தில் ஆண்கள் குறைந்த சதவிகித்தில் தொடர்ந்து மாறி வந்தாலும் அது பாராட்டக் கூடிய விஷயம்தானே

    ReplyDelete
  4. மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை...

    நல்ல பகிர்வு சகோதரி...

    ReplyDelete
  5. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    ReplyDelete
  6. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete
  7. உங்களது மொபைலில் தெரியாமல் Delete ஆன போட்டோ மற்றும் வீடியோ திரும்ப பெறுவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=IrUXR4Gxa9M

    ReplyDelete
  8. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  9. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....