Wednesday, 16 March 2016

குழந்தைகளை குழந்தைகளாகவே..




ஒரு காலத்தில, நம்ம பாட்டி தாத்தா பேசிகிட்டு இருக்கும் போதெல்லாம், நாம நின்னு வாய் பார்த்தோம் என்றால், 'போ, அந்த பக்கம்ன்னு...' துரத்திருவாங்க. 

அடுத்தது, நம்ம அம்மா அப்பா....அவங்க பேசும் போது, குறுக்கே பேசினால் (பேசுவோம்...அவ்வளவு வளர்ந்துட்டோம்னு காமிச்சுக்குவோம்...), 'பெரிய பொம்பளையாட்டம் பேச வந்துட்டான்னு ...' நம்மளை ஒதுக்கிருவாங்க. வேற வழி இல்லாம நாமளா அந்த இடத்தில் இருந்து நகந்திருவோம். 

என் பையனை வளர்க்கும் போது, எதை அவனை வச்சுக்கிட்டு பேசணுமோ, அதை மட்டும் பேசுவோம். மற்றதை அவன் இல்லாதப்போ பேசுவோம். அப்படி பெற்றோராக இருக்கோம்..


இப்போ அப்படியில்லை...சில பெற்றோர்கள் சின்ன குட்டிஸ் முன்னாடி எதையெல்லாம் பேசக்கூடாதோ (Always love you, I love U, Hug me )...., எதையெல்லாம் செய்யக்கூடாதோ (Hugging, Kissing )...அதையெல்லாம் செய்வது என்ற போக்கில் போகிறார்கள். இதை பார்க்கும் அந்த குழந்தைகள் பள்ளியில் போய் இவங்க செய்வதை அங்கு செயல்படுத்தும் போது, அது ஒரு பிரச்சனையாய் ஒழுக்கமின்மையாய் அங்கு பார்க்கப்படுகிறது. அதில் தவறில்லை. 


இளம் தலைமுறையினருக்கு: 

தினமும் நம் குழந்தைகள் சமூகத்துக்குள் (பள்ளி, கல்லூரி, சிறப்பு வகுப்பு...) சென்று வருகிறார்கள் என்பதை பெற்றவர்கள் உணரவேண்டும். சமூக கோட்பாடுகளுடன் ஒத்து வாழ அவர்களுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கவேண்டும். 

கணவன் மனைவி என்பதில் இருந்து அம்மா அப்பா என்னும் ஒரு பொறுப்பிற்கு தன்னை அவர்கள் உயர்த்திக் கொள்ளவேண்டும். 

ஒட்டி உரசும் செயல்களில் சில கண்ணியங்களைக் கடைபிடிக்க வேண்டும். 

நல்லொழுக்கம் நம்மிடம், நம் குடும்பங்களில் இருந்துதான் சமூகத்துக்குள் போகிறது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். 

உறவுகளை சகஜப்படுத்தும் மேல்நாட்டு கலாசாரங்கள் என்றும் நம் இந்திய சமூகத்துள் ஒத்துப்போகாது என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். 

ஒரு சமூகத்தைப் பார்த்து இன்னொரு சமூகம் சமன் செய்து கொள்ளமுடியாது. ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டமைப்புகள் கொண்டவை.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சமூக கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதை புரிந்து செயல்படவேண்டும்.



குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுவோம்..




3 comments:

  1. பயனுள்ள இந்தக்கட்டுரை மிகவும் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. அனைவரும் இதனை யோசித்து உணர்ந்து செயல்பட வேண்டும்தான்.

    //குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்கவிடுவோம்..//

    :) ஆம். நிச்சயமாக ....

    படத்தேர்வுகளுக்கும் சேர்த்து பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமை
    தொடர்க

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....