Skip to main content

குழந்தைகள் வேண்டுமா - ஒரு தனி மனித பார்வை

குழந்தைகள் வேண்டுமா



தனிமனித முடிவுகள், உரிமைகள் பற்றிய அலசல்கள் இப்போது நிறையவே வருகின்றன. அதில் ஒன்றாய் இன்று காலை நாளிதழில் படித்த ஒன்றை இங்கு பகிர்கிறேன். 

திருமணம் புரிந்து, குழந்தைகள் வேண்டாம் என்றிருத்தல் குறித்த கட்டுரை ஒன்றை படித்தேன் இன்றைய ஹிந்து தினசரியில். கௌரி டாங்கே, (குடும்ப ஆலோசகர், Always a parent ஆசிரியர்) அவர்கள் எழுதியது.

http://www.thehindu.com/features/magazine/gouri-dange-on-being-childless-by-choice/article7565746.ece

குழந்தைகள் இல்லாது இருத்தல் என்பதை ஒரு சாதாரண விஷயமாய் சொல்வது சுலபம். ஆனால், வாரிசுகளை தோள் தூக்கிச் சுமக்கும் நம் இந்திய சமூகத்தில், பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் இல்லாது இருப்பது எனபது கடினமே. இந்த முடிவில் இருந்தவர்களை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் தனிப்பட்ட முறையில் அவர்களின் முடிவை ஆதரித்திருப்பதை இவர் எழுத்தில் பார்க்கும் போது, வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே தோன்றுகிறது. 

நிறைய நடைமுறை குற்றச்சாட்டுக்களையும் கௌரி அலசியிருக்கிறார். அதை தாண்டி வரவும் வேண்டியிருக்கும் துணிந்து முடிவு எடுக்கும் இருவருக்குள்ளும் வேண்டும். வேண்டாம் இருப்பவர்கள், எப்போதும் சந்தோஷித்துக் கொண்டோ ஊர் சுற்றிக் கொண்டோ இல்லை என்கிறார். அவர்கள் மற்றவர்களுக்கு, கைவிடப்பட்ட வயதானவர்களுக்கு, மற்றவர்களின் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, சமூகத்துக்காக வாழ்கிறார்கள் என்கிறார். இது ஒரு தத்துவார்த்த நிலை என்பேன். தன முடிவை சரியான பாதையில் செலுத்தி வாழ்விற்கு ஓர் அர்த்தம் தேடிக் கொள்கிறார்கள். 



என் தோழி ஒருத்தி தன் மகனுக்கு, திருமணம் முடித்து வைத்து ஒரு மாதத்தில் இருந்தே அவரைச் சுற்றி இருக்கும் சமூகம் விஷேசம் உண்டா எனக் கேட்கத் தொடங்கியதை கூறிய போது, நான் யோசிக்கிறேன், இதற்கு முன் இந்த சமூகம் அவரிடம் என்ன கேட்டிருக்கும் என்பதைப் பற்றி. அவர் சாப்பிட்டதையும் கோவிலுக்கு சென்றதையும் ஊரில் இருப்பதையும் இல்லாததையும் கேட்டுக் கொண்டிருந்திருக்கும். அவர்களுக்கு ஏதாவது பேசவும், விமர்சிக்கவும், அலசவும் பல விஷயங்கள் தேவைப்படுகிறது. அதில் இதுவும் ஒன்றாகிப் போகிறது. அதனால் அவர்களை ஒதுக்கிவிடுவதுதான் சில நேரங்களில் சிறந்ததாய் படுகிறது.

திருமணம் என்பதை வேண்டாம் என்று சொல்லி வாழும் ஆணையும் பெண்ணையும் நாம் ஏற்றுவிட்டிருக்கிறோம். ஜாதகம் சரியில்லாதது, அழகின்மை போன்ற கட்டாய காரணங்களைக் கொண்டு அந்த நிலைக்கு வந்திருப்பவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அவர்கள் சங்கடத்தினால் அதற்குள் நுழைந்தவர்கள். 

திருமணம் தேவையில்லை என்ற கொள்கை கொண்டு இருப்பவர்களைப் பற்றி பார்த்தால், இந்த நிலை பழங்காலத்து அவ்வைபிராட்டியாரின் வாழ்க்கையில் இருந்தே ஆரம்பிக்கிறது. அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வைக்கு மூப்பும், ஆண்டாளுக்கு கண்ணனும், மணிமேகலைக்கு துறவறமும் கைக்கொடுத்திருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது சமூகத்திடம் சொல்ல. 


என் தோழமையில் ஒருவர் எண்பதுகளில் திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லாமல், அதையே காரணமும் சொல்லி, இருந்தபோது, சுற்றி இருந்த உறவு சமூகம் அவருக்கு அதிகமான ஆட்களைத் திருமணத்திற்கு பிடித்துக் கொடுத்து தன் கடமையை செய்ததாய் பீற்றிக் கொண்டது. ஆனால் அவரின் தாயே அதை ஏற்றுக் கொண்ட பிறகுதான், நமக்கென்ன என்று ஒதுங்கியது. 

இன்று என் உறவில் உள்ள பெண் ஒருவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது இருந்த சமூக அழுத்தம் இன்று இல்லை. தாய் தகப்பன் இருவருமே அதை சத்தமின்றி ஏற்றுக் கொண்டார்கள். அது அவள் வாழ்க்கை என்பதில் தெளிவு காட்டுகிறார்கள். 



இதே நிலைதான் குழந்தை வேண்டாம் என்றிருப்பதற்கும் என நாம் சொல்லமுடியும். குழந்தைகள் என்பது நம் இரத்தம், வாரிசு என்பதெல்லாம் உண்மைதான். அதை தாண்டி தனி மனித சுதந்திரம் என்பது அதிகமான விவாதத்திற்கு இப்போது எடுத்துக் கொள்ளப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்கள் தவிர்க்க, குழந்தைகள் மீது அதிக அல்லது கட்டாய ஈடுபாடு இல்லாத, அவர்களை வளர்க்க போதுமான பொருளாதார வசதியில்லாத இப்படி எத்தனையோ இல்லாதவைகளின் நடுவில் இந்த முடிவு தவறானது இல்லை என்றே தோன்றுகிறது. விருப்பம் இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். சந்ததி தேவைப்படுவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். வசதி இருப்பவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்னும் நிலை இருக்கிறது.

இந்த பார்வை சமூகத்திற்கு நல்லதா என்னும் கேள்விக்கு நல்லதென்றும் ஒன்றில்லை, கெட்டதென்றும் ஒன்றில்லை தனிமனித விவாதத்தில். தனி மனிதனின் உணர்வே இங்கு பெரிதூன்றுகிறது இக்காலத்தில் என்பதே புரிகிறது. எனக்கு பிடித்திருந்தது பெற்றுக் கொண்டேன் என்று சொல்லும் பெற்றோர்கள், விருப்பத்துடன் செய்யும் இந்த செயலில் சிரமம் பார்ப்பதில்லை. 

அதேபோல், விருப்பமற்று இருப்பவர்களைக் கட்டாயப்படுத்துதல் என்பதும் இதே போன்ற ஒரு நிலைதான். நல்லதும் கேட்டதும், விருப்பமும் விருப்பமின்மையும் எல்லாமே அவரவர் பார்வையைச் சார்ந்ததே. 

காலம் வெகுவாய் மாறிவிட்டது என்பதை விட, தனிமனித சுதந்திரம் மேம்பட்டிருக்கிறது, அதை சமூகம் ஏற்றுக் கொண்டும் வருகிறது என்பதே நாளிதழ்களில் வெளிவருகின்ற இதுபோன்ற கட்டுரைகள், நேர்காணல்கள், விவாதங்கள் உறுதிப்படுத்துகின்றன. 


Comments

  1. சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது அருமையான அலசல் பகிர்வு.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. ஓ..பார்க்கிறேன்

      Delete
  3. நல்ல பகிர்வு...
    நம் இரத்தம்... நம் வாரிசு... வளர்ப்புப் பிரச்சினை காரணமாக வேண்டாம் என்று நினைப்பது மிகச் சொற்பமே... என்ன இருந்தாலும் குழந்தை வேண்டாம் என்று இருக்க மனது வருவதில்லை என்பதே உண்மை...

    நல்ல பகிர்வு அக்கா...

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நிஜம்தான். இதுவும் நிஜம்தான். சமுகம் சிறிதாய் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆனாலும் நம் குழந்தைகள் என்று வரும்போது ஒரு தனிப்பார்வை கொடுக்கிறோம்.

      Delete
  4. நன்றி தனபாலன். என்னால் இந்த முறை சந்திப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந