Sunday, 4 May 2014

எங்க உடம்பை பற்றி எங்களுக்குதானே தெரியும்...

டாக்டர்ஸ் ஒன்லி...


நம்ம ஊருல இருக்கிற டாக்டர்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லணும். அவங்களை ரெண்டு வகையா பிரிக்கலாம். 

ஒண்ணு, 
மெத்த படித்தவர்கள்...MBBS, MD,MDDM,MCh, FRCS....இப்படி அடுக்கிகிட்டே போயிருப்பாங்க...
இவங்க எல்லாம் நமக்கு பெரிய நோயா வந்தா மட்டுமே கவனமா பார்ப்பாங்க. சாதாரணமா முதுகு வலின்னு போனா அசால்ட்டா பார்த்துவிட்டுருவாங்க...
பெரும்பாலும் இன்டெர்ஆக்டிவா இருக்க மாட்டாங்க...

ரெண்டாவது, 
வெறும் MBBS மட்டும் படிச்சிருப்பாங்க...ஆனா, அவங்க specialize பண்ணாத துறையில் கூட நம்ம உடம்புக்கு தக்க மருந்து கொடுப்பாங்க. முடியலைனா, வேற டாக்டர் கிட்டே refer பண்ணுவாங்க...இவங்கள மாதிரிபட்ட டாக்டர்சை நாம துணிஞ்சு பாமிலி டாக்டரா வச்சிக்கலாம்...

ஏன் இதெல்லாம் சொல்றேன்னு சந்தேகம் வரும் உங்களுக்கு...என் பிரச்னையும் பற்றி சொன்னாதான் உங்களுக்கு புரியும். 


ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு ஜெனரல் செக்அப்புக்காக ஒரு துறை சார்ந்த மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். வால் மாதிரி பட்டங்களை பின்னால் வைத்திருந்தார். நிறைய வருட அனுபவம் உள்ளவர் என்று என் தோழியின் recommendation னாலே போனேன். டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார். அது ஓகேதான்..

இந்த prescription எழுத வரும்போது, எனக்கு இதுக்கு முன் என்ன பிரச்னை இருந்ததுன்னு சொன்னேன். என்ன பெருசா இருக்க போகுது...அல்சர்தாங்க...Oh ன்னு சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.

நானும் மூணு நாளா எடுத்துக்கிட்டேன். சிறிது சிறிதாய் abdominal pain, naausea என்று ஆரம்பித்து, நேற்று ஒரு uneasiness, discomfort லெவலுக்கு என்னை கொண்டுப்போய்விட்டது. பக்கத்தில் இருக்கும் மருத்துவர் ஒருவரிடம் காண்பித்ததில், அந்த மாத்திரையை நிப்பாட்ட சொல்லிவிட்டார். ட்ரீட்மென்ட் கொடுத்து அதை சரி செய்ய வேறு மாத்திரைகள் கொடுத்தார்.



இதில் எனக்கு வீண் செலவு வேறு. இனி நான் ரெகவர் ஆக ரெண்டு நாள் ஆகும்.

இன்று மறுபடியும் போன் பண்ணி, டாக்டர் எனக்கு இப்படி இப்படி என்று சொல்லிய பிறகும், ‘இப்படி ஆக சான்சே இல்லையே..நீங்க நேரில் வாங்க செக்அப் பண்ணிக்குவோம்...’ என்கிறார். எதுக்கு இன்னும் ஒரு 500 ரூபாய் கான்சல்டேஷன் பீஸுக்காகவா?...


டாக்டர்ங்க கிட்டே ரெண்டு விஷயம் சொல்ல விரும்புறேன்.

நாங்களும் உங்க கிட்டே வரதுக்கு முன்னாடி நெட்ல கொஞ்சம் படிப்போம்தான். உங்க கிட்டே வந்து அதை நாங்க சொன்னா, அதை நோய் பற்றிய எங்க பயமா எடுத்துகுங்க. ‘ரொம்ப அறிவாளி மாதிரி பேசுறாங்க’ ன்னு மனசுக்குள்ளே எங்களைத் திட்டாதீங்க. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காதுன்னு சொல்லி புரிய வைங்க.   

அல்சர் இருக்குன்னு சொன்னா, கொஞ்சம் யோசிங்க. உங்களுக்கு மருந்து எழுதி எவ்வளவு அனுபவம் இருக்குமோ, அதே போல எங்களுக்கும் மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு நிறைய அனுபவம் இருக்கும். எங்க உடம்பை பற்றி எங்களுக்குதானே தெரியும்...

இனியாவது, எங்க கஷ்டத்திற்கு காது கொடுப்பீங்கன்னு நம்புறேன்...

கரெக்ட்தானே நான் சொல்வது...






17 comments:

  1. இந்த டாக்டருங்களை நினைச்சா ,அல்சர் கூடத்தான் செய்யும் போலிருக்கே !

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ உண்மைதான்..

      Delete
  2. காது கொடுப்பதா...? காசு கொடுத்தால் போதும்...!

    ReplyDelete
    Replies
    1. பீஸ் மட்டும் ஏறிகிட்டே இருக்கு. நம்ம உடல்நிலை மோசமாகிகிட்டே இருக்கு...என்ன செய்வது?

      Delete
  3. வர வர டாக்டர்னாலே பயம் வந்துருது! டாக்டர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்...இன்னும் என்னால் சாப்பிட முடியவில்லை...

      Delete
  4. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை வைத்தியர்களின் கவனக் குறைவான
    செற்பாட்டால் எத்தனை எத்தனை இழப்புகளை நாங்கள் சந்தித்து
    வருகிறோம் இன்னும் கொஞ்சம் சொல்லப் போனால் மருத்துவத்
    துறை மீதி நம்பிக்கை அற்றுப் போய் அச்சம் தான் உச்சம் தலையில்
    நிக்குறது .சில இடங்களில் எங்களை வைத்தே நல்லாப் பழகுகிறார்கள்
    என்பதை மட்டும் மறுக்கவே முடியாது .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்
    தோழி நோயற்ற வாழ்வு வாழ இவ் வையகத்தில் .

    ReplyDelete
    Replies
    1. உண்மையே நீங்கள் சொல்வது. நன்றி தோழி...

      Delete
  5. ///என் தோழியின் recommendation னாலே போனேன்////

    முதலில் உங்கள் தோழியை பார்த்து தலையில் வலிக்கிற மாதிரி கொட்டுங்க தவறான recommendation

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...அதை செய்துவிட்டேன்...

      Delete

  6. //நிறைய வருட அனுபவம் உள்ளவர்///

    நிறைய அனுபவம் உள்ள டாக்டர் உடனே நோயை குணப்படுத்த மருந்து தரமாட்டார். அப்படி தந்து இருந்தால் வால் மாதிரி பட்டங்களை பெற அவர் செலவழித்த பணத்தை எப்படி திரும்பி எடுப்பதாம்..

    ReplyDelete
    Replies
    1. நம்மளை வச்சிதானே பிழைப்பே நடக்குது...

      Delete
  7. மதுரைத் தமிழன் சொன்னது சரிதான். அதிகம் படிக்க அதிகம் செலவிட்ட டாக்டர்கள் கன்சல்டேஷன் பீஸ் தொடங்கி எல்லா டெஸ்ட்டுகளையும் வைத்து காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். எல்லா டெஸ்ட்டும் எடுத்தபின் நார்மல் தாங்க ன்னு சொல்லி ரெண்டு மாத்திரை குடுக்கறதோட சரி. டாக்டர்களிடம் உங்கள் சொ(நொ)ந்த அனுபவங்கள் ஏறக்குறைய பலருக்கும் பொருந்திவரக் கூடியவைதான்.

    ReplyDelete
    Replies
    1. இனி அடுத்த முறை டாக்டர் பார்க்க செல்லும் முன் கவனமாக இருப்போம் அல்லவா...நன்றி கணேஷ்...

      Delete

    2. அந்த டாக்டரின் பெயரையும் வெளியிட்டு இருந்தால் பலரும் பலன் அடைவார்கள் அல்லவா.. பெயர் சொன்னால் லீகல் பிரச்சனை என்றால் சூசகமாக அல்லது க்ளு வைத்து சொல்லாம் அல்லவா

      Delete
  8. கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல போயிட்டா பிரச்சனை இல்லியோ?

    ReplyDelete
    Replies
    1. பிரைவேட் ஆஸ்பிட்டலில் பணம் பிடுங்கி பார்க்கவாவது செய்வார்கள். அங்கு பணம் பிடுங்கினாலும் பார்க்கமாட்டார்கள்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....