வட்டம் குலைந்த நிலவின் முழிப்பில்,
பேயாய் முருங்கையின் கைகள்
காற்றில்...
சட்டென்று தாழ்ந்து தரை தொட்டும்
வீசி உயர்ந்து நிலவை விரட்டியும்
தளிரின் நிழல்களை கூர்வாளாய் நீட்டியும்
சருகுகளை சுருட்டி நகங்களாக்கியும்
சாய்ந்திருந்த அந்த ஓட்டுவீட்டை முழுங்கியபடி,
தன்னையே,
வேதாளமாக்கியும்
விக்கிரமாதித்தனாக்கியும்,
திறனற்ற ஒரு சுயம்பு காட்டி,
விடியலின் முதல் வெளிச்சத்தில்
அடங்கிப் போக ஆர்ப்பரிக்கிறது..
கவிதை அருமை சகோதரி.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
Good
ReplyDelete