Friday, 16 May 2014

சாளரக்கவி..



சிறு விளக்குகளுடன்
வெள்ளையில் சதுரமிட்ட
மருத்துவமனையின் மோட்டுவளையை
பார்த்து வந்த பின்னால்,
என்னைப் போலவே
என் வானமும்
நகராத மேகங்களுடன்
அசைவற்றுக் கிடக்கிறது

சாளரத்தின்
கண்ணாடி சட்டங்களின் வழியே
என் சின்ன சிறகுகளின் விசாரிப்புக்களும்,  

நான் இல்லாத சமையலறையில்
அங்குமிங்குமாக ஓடும்  
அணிலின் சந்தோஷமும்,

வாசலில் அசையும்
சீனத்து பெங் சூயியின்
சில்லிட்ட அழைப்புகளும்,

என்னை நனைக்க முடியாத
ஆதங்கத்தில் விழும்
மழையின் கண்ணீர் கோடுகளும்

இன்று என்னை
உண்மையிலேயே  
சாளரக்கவியாக்கிவிட்டன..



4 comments:

  1. அருமை! சாளரக் காட்சிகள் ரசிக்க வைக்கும் சில சமயம்!

    ReplyDelete
  2. சரளமாக வந்து விழுந்து
    பெருமைகொண்ட வார்த்தைகளுடன் கூடிய
    சாரளக்கவி அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....