வெற்றிடத்தில்
காற்று சுவாசிக்கும்
இதயமொன்று,
நிலவென்று
பெயரிட்டுக் கொண்டது...
மையலின் இருட்டை
உடைத்துப் போட்டு
உதிர்ந்த நட்சத்திரங்களை
பூக்களாக்கிச் சிரித்தது
கூட்டின் குச்சிகளை
இரவு விளக்காக்கி
சிறகுகளைச் சத்தமிடாதபடி
சாந்தப்படுத்தியது
கருப்பிட்டு மெழுகிய வானத்தை
வெளிச்சமிட்டுவிட்டு
விடியலுக்காகக்
காத்திருக்கத் தொடங்கியது...
ஆகா...!
ReplyDeleteநன்றி...:)
Deleteநன்றி அய்யா பாராட்டுக்கு...
ReplyDeleteகவிதை அருமை சகோதரி...
ReplyDelete