தள்ளாத வயது...
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும் நடையும்...
எதை நோக்கியது
இந்த நடை...
நடந்தால் மட்டுமே
நாட்கள் தன்னைக்
கடந்துப் போகுமென்றா?
நடக்காத நாட்களை
தன்னால்
கடக்க முடியாதென்றா?
உயிரிருக்கும் கூட்டை
உறுதி செய்யவா?
இறுதியின் நிலையை
உலகுக்கு பிரகடனப்படுத்தவா?
எதை நோக்கியது
இந்த நடை,
காற்றின் இழுப்பிற்கு
தள்ளாடும்
வயதுடன்...
தள்ளாத வயது...
ReplyDeleteகவிதையும் படமும் அருமை.
நன்றி குமார்...
Deleteஎதுவும் கடந்து போகும்...
ReplyDeleteவாழ்வில் எல்லாமே இப்படிதான்...
Deleteகாலை ஆட்டாமல் படுத்து இருந்தாலே சந்தேகப் படும் இந்த சமூகத்திற்கு தன் இருப்பை உணர்த்துகிறாரோ ?
ReplyDeleteம்ம்ம்...உண்மையான கேள்வி...
Deleteதள்ளாத வயது...
ReplyDeleteபடமும் அருமை, கவிதையும் அருமை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila D
மிக்க நன்றி அய்யா...
Deleteநடமாடினால்தான் பிழைப்பு என்பதாலோ? அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteஅவர்களின் வயிற்று பசியும் நடந்தால் தான் அடங்கும் என்னும் நிலைதான்...உண்மை...
Delete