Monday, 6 January 2014

இரவு கடந்து...


வாடித்தான் போய்விட்டன
வாழ்த்திய பூக்கள்...

வெள்ளையில் புள்ளிகள் சுமந்தும்
மஞ்சளும் சிவப்புமாய் மலர்ந்து  
முந்திய நாளில் 
அலங்கரித்த பூங்கொத்தின் 
முகம் மாற்றி,
உதிரும் தருணங்களை நோக்கியபடி   
வாடித்தான் போய்விட்டன
வாழ்த்தியவை...
வாடித்தான் போய்விட்டன
வாழ்த்தியவை...

என் அறை அடைத்து நின்றன
அவை விட்டுச் சென்ற
வாசத்தின் சுவடுகள்...

இரவு கடந்து
அவையும் காணாமல் போகும்
என்னுள் கனவாகிவிட்ட   
உன் நினைவுகளைப் போல....



7 comments:

  1. வணக்கம்
    நினைவுகள் சுமந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை... எல்லாமே கடந்து போகும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகிய வரிகளில் அருமையான கவிதை.

    ReplyDelete
  4. காதல் நினைவுகளை கருகிய பூக்களோடு ஒப்பிட்ட கவிதை அருமை!

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....