Friday, 10 January 2014

தூரங்களை...



நகர்ந்து செல்லும் கோட்டிற்கு
இணையாய் இன்னொன்று...

சேரும் புள்ளி நீண்டுக் கொண்டேயிருக்கிறது....

காத்திருப்பு களவாடிய நிமிடங்கள்
என்னை என்னிலிருந்து பிரித்து
சருகுகளின் சத்தங்களின் மேல் முளைத்த
அடர்ந்துயர்ந்த மரங்களின் வழியே இட்டுச் சென்று
அம்புலியின் வாசம் மறுத்த மண்ணை
என்னுள் சுவாசமாக்கிவிடுகிறது...

தூரங்களை அருகாக்கிவிட்டு
என் கை உதறிச் செல்கிறது....

1 comment:

உங்க கருத்தை சொல்லலாம்.....