மௌனத்தை வற்புறுத்தி
வார்த்தைகளை வாங்க முடியாமல்
சிந்திக் கிடப்பவைகளை மட்டும்
சிரச்சேதம் செய்துக் கொள்கிறேன்...
என்றாவது ஒருநாள் அவையும்
என்னை விட்டு நீங்கக் கூடும்...
அதற்கு முன் சிலவற்றையாவது
யமுனையில் கரைக்க விழைகிறேன்...
இனி உன் நினைவுகளைத் தொடுக்க
ஏதுமில்லை என்னிடம்
புத்தகத்தின் உள் ஒளிந்திருக்கும்
பழுப்பாய்ப் போன மல்லிகையின்
ஒன்றிரண்டு சிற்றிதழ்களைத் தவிர...
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செமையா இருக்குது கவிதை...அந்த படம் கூடுதல் பலம் ...
ReplyDelete##சிந்திக் கிடப்பவைகளை மட்டும்
சிரச்சேதம் செய்துக் கொள்கிறேன்...
என்றாவது ஒருநாள் அவையும்
என்னை விட்டு நீங்கக் கூடும்... ###
புரியல...நீங்க சிரச்சேதம் செய்த பின்னாடி அவையும் என்னை விட்டு நீங்கி விடக்கூடும் என்று எதனை சொல்றீங்க? கொஞ்சம் குழப்பமா இருக்கு ..தவறா எழுதுனா மன்னிச்சுக்கோங்க அக்கா..
காய்ந்து போன சிற்றிதழ்கள் சிதறிபோகுமுன்னே புதியதாய் தொடுக்க நினைவுகளில் புதியதாய் மல்லிகைபூக்க்கள் மலரட்டும் ..
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.