Wednesday, 30 October 2013

எஞ்சியது ஒன்றுமில்லாமல்...




வெற்றிடம் நோக்கியதாய் அமைந்தேவிட்டது
அந்த கூண்டின் அடையாளம்... 

ஒட்டையிட்ட சிறு பானைகளும் 
நட்டுவைத்த மரக்கிளைகளும் 
தட்டும் சில கிண்ணங்களுமாய் 
பறவைகளற்றுப் போயிருந்தது...

காதல் சிட்டுக்களையும் 
அதன் கீச்சுக்களையும் 
கொஞ்சும் கிளிகளையும் 
சிறு குஞ்சுகளையும் 
அடை காத்திருந்திருக்கிறது
வருடங்களாய்...

எஞ்சியது ஒன்றுமில்லாமல் 
மிச்சமாய் இருக்கும் கம்பிகளுடன்  
இவ்வமயம் தனித்தே நிற்கிறது...

தன்னருகே வந்தமரும் சிறகுகளை 
ஆசைக்கொண்டு அழைத்துப் பார்த்தது
அதன் சட்டமிட்ட கம்பிகளே  
அதற்கு சுமையாகிப் போனதை உணராமல்,
இன்னமுமாய் 
காக்கைகளிடம் பேசிக்கொண்டே 
கதவு திறக்கக் காத்திருக்கிறது... 


17 comments:

  1. தன்னருகே வந்தமரும் சிறகுகளை
    ஆசைக்கொண்டு அழைத்துப் பார்த்தது
    அதன் சட்டமிட்ட கம்பிகளே
    அதற்கு சுமையாகிப் போனதை உணராமல்,
    இன்னமுமாய்
    காக்கைகளிடம் பேசிக்கொண்டே
    கதவு திறக்கக் காத்திருக்கிறது...
    கற்பனை நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. எங்கே போயின பறவைகள்? இறந்தனவா? கூட்டைத் துறந்து பறந்தனவா? பறந்துபோயின என்றால், எப்போதோ சிலகாலம் அடைக்கலம் தந்திருந்த கூண்டருகில் வந்து சற்றே குசலம் விசாரித்துப்போகலாம் ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கும் அப்பறவைகள். அழகான கவிதை. பாராட்டுகள் அகிலா.

    ReplyDelete
    Replies
    1. ஊர் மாற்றிப் போகும் போது அதில் வளர்க்கும் அனைத்து பறவைகளையும் பறக்க விடுவதும் மறுபடியும் வாங்கி வளர்ப்பதுவுமாக இருந்தேன். இப்போது வெறுமையாய் இருக்கிறது அந்த கூண்டு...
      நன்றி கீதமஞ்சரி...

      Delete
  3. அருமை சகோ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  5. புல்லினத்திற்கு
    புதிதாய்
    புனையப்பட்ட
    அழகிய கவிதை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்...

      Delete
  6. மரங்களை வெட்டுவதன் மூலம் இம்மாதிரியான பறவைகளும் அழிந்துவருகின்றன... நல்ல கவிதை.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. எஞ்சியது ஒன்றுமில்லாமல்.இல்லை அதன் நினைவுகள் எஞ்சி இருக்கின்றனவே

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜன்...

      Delete
  8. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அழகு அழகு......பறவைகளுக்காய் ஓர் அழகு கவி!!!அருமை சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றுதான் பறவைகளும்...நன்றி...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....