Skip to main content

ஜன்னலோர இருக்கை பேருந்தில்...



ஜன்னலோர இருக்கை பேருந்தில்... 

நிறுத்தம் ஒன்றில் 
தொப்பை சுமந்த கணவனும் 
செப்புச் சிலையாய் அவன் மனைவியும் 
சம்பந்தமேயில்லாமல் பேருந்தின் உள்
ஒலித்துக் கொண்டிருந்தது, 
சிந்திய வெண்மணி 
சிப்பியில் முத்தாச்சு என்று...

வைசியாள் வீதியின் வளைவில் 
நெருங்கி கடக்கும் பேருந்தில் 
சிறு மார்பு நசுங்க 
பட்டுசட்டையணிந்த பெண்குழந்தையும் 
அருகாய் கண்களை உறுத்திய  
துருக் கோர்த்த ஜன்னல் கம்பிகளும்... 

செல்வபுரத்து நீர்நிலை தொட்ட ஈரக் காற்று 
ஏதோ ஒரு பறவையின் மணத்துடன் 
நாசியை நனைக்க...
வெள்ளையடிக்கப்பட்ட மூடுகளுடன் தென்னைகள் 
வரிசையாய் தோப்புக்குள் 
பண்ணைக்காரனின் பவிசைக் காட்டியபடி நிற்க...

கண்ணயர விடாமல் கடக்கும் காட்சிகளைக் 
கவிதை மறந்து காற்றாய்ச் சுவாசிக்க
இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு 
நிறுத்தத்தில் தரைத் தொட்டேன் 
நான் மட்டுமாக...


Comments

  1. Replies
    1. இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு.... G+ இணைப்பு கொடுத்தால் (facebook-ல்) உங்களின் தளத்திற்கு (குறிப்பிட்ட பதிவிற்கு) செல்ல எப்படியும் ஒரு அரை மணி நேரம் ஆகும்... மாற்றுங்கள்... மாறுங்கள்... அன்புடன் DD

      Delete
    2. சரி தனபாலன்...
      நன்றி...

      Delete
  2. //இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு நிறுத்தத்தில் தரைத் தொட்டேன்
    நான் மட்டுமாக...//

    அருமையான வரிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ///அருமை///

    http://www.thamizhmozhi.net
    தமிழ்மொழி.வலை

    ReplyDelete
  4. உங்களோடு சேர்ந்து நானும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பதுதானே அழகு எழில்...

      Delete
  5. எங்களையும் பயணப்பட வைத்து இறங்க மறுக்கும் மனதையும் தந்துவிட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...நன்றி குமார்...

      Delete
  6. வணக்கம்

    கவிதையின் கற்பனை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  7. Replies
    1. நன்றி சௌந்தர்...

      Delete
  8. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தொப்பை சுமந்த கணவனும் அவனை மனதில் சுமந்த மனைவியும் காட்சியை சுமந்த கவிஞரும் கவிதை படித்தபின்பும் மனதில் இருந்து இறங்க மறுகின்றனரே

    ReplyDelete
  10. ஜன்னலோர பேருந்திலிருந்து லைவ் டெலிகாஸ்ட் அருமை ..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி