Skip to main content

தமிழ்தான்....




இன்று என்னுடைய சில கவிதைகளை அச்செடுக்க ஒரு ப்ரௌசிங் சென்ட்டர் கம் செராக்ஸ் கடைக்குச் சென்றிருந்தேன். அருகில் இருந்த காலேஜில் இருந்து மாணவ மாணவிகளும் காப்பி எடுத்துக் கொண்டிருந்தனர். 

அந்த கடைக்காரப் பெண் அதில் பிஸியாக இருந்ததால் நானே சிஸ்டமில் அமர்ந்து என்னுடையதை பிரிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னையே கவனித்துக் கொண்டிருந்தனர் இரண்டு மாணவர்கள். இருவர் கையிலும் ஏகப்பட்ட தாயத்து புது மஞ்சள் குங்கும வாசனையுடன். 

'என்ன இன்டர்னல்ஸா ?' என்று கேள்வியைப் போட்டேன். 'ஆமாங்க்கா...எப்படி தெரியும்?...எங்க காலேஜ்லேயா வேலை பார்க்குறீங்க?' என்று பதில் கேள்வி கேட்டான்.   

'அப்படியெல்லாம் இல்லே...உன் புது தாயத்து + கடைசி நேர செராக்ஸ் காப்பி இதெல்லாம் தான் சொல்லுது...' என்றவுடன் ஹிஹி...என்று சிரித்தான். 

என் பிரிண்ட் எடுத்த பேப்பரை எட்டிப் பார்த்து 'இது என்ன தமிழா?...' என்றான்.

ஆமாம்...என்றதும், 'ப்ப்ச்...' என்று இளக்காரமாய் ஒரு உச் கொட்டினான். 

'நீ என்ன...' என்று கேட்டேன். 

'கெமிஸ்ட்ரி...' என்று பெருமிதமாய் சொன்னான். 

நானும் ஒரு உச் கொட்டிவிட்டு,  'நான் என்னன்னு தெரியுமா?...என்ஜினீயரிங் ' என்றேன்.

கண்ணில ஒரு ஷாக் காமிச்சான். சவுண்ட் குறைச்சு 'அப்போ இந்த தமிழு...' என்று இழுத்தான். 

'தமிழ் என் தாய்மொழி...நான் படிச்ச என்ஜினீயரிங் ஒரு சப்ஜெக்ட்...படிச்சதை வைச்சு வேலை பார்க்கலாம். இலக்கியம் படைக்கமுடியுமா...' ன்னு கேட்டேன். 

பெரிதாக ஒரு ஓ போட்டான். 

'அதைக் கொஞ்சம் கொடுங்களேன்...படிச்சி பார்க்கிறேன்...' ன்னு வாங்கி கவிதையைப் படிக்க ஆரம்பித்தான். அது குட்டி காதல் கவிதைகளாக இருக்கவும் அவனும் அவன் நண்பனுமாக ரசித்துப் படித்துவிட்டு மெயில் ஐடி எல்லாம் எக்ஸ்சேஞ் பண்ணிட்டுப் போனாங்க. 

நாமதான் காலேஜ் படிக்கும் போது தமிழை மறந்துட்டு படிச்சோம். இந்த பசங்களாவது இன்றைய பொழுது... இல்லை...இன்னும் இரண்டு நாள் கழித்துக்கூட இந்த நிமிடம் படித்த தமிழை நினைப்பார்கள் என்ற நம்பிக்கை. கொஞ்சம் திருப்தியாக கூட இருந்தது...ஏதோ என்னால் முடிந்தது....     

      


Comments

  1. அந்தளவு உள்ளது தாய் (தமிழ்) மொழி...!

    ReplyDelete
  2. //'தமிழ் என் தாய்மொழி...நான் படிச்ச என்ஜினீயரிங் ஒரு சப்ஜெக்ட்...படிச்சதை வைச்சு வேலை பார்க்கலாம். இலக்கியம் படைக்கமுடியுமா...' //

    ஆஹா, அருமை.. சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் துணிச்சலையும் தாய்மொழிப் பற்றையும் பாராட்டியேயாக
    வேண்டும் .வாழ்த்துக்கள் தோழி .என்ன தான் படித்திருந்தாலும்
    உங்களைப் போன்றவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருப்பதால்
    தான் தமிழ் மொழியும் வாழ்ந்து கொண்டிருக்கிறது .இந்த ஆக்கத்தைப்
    படித்து மிகவும் பெருமையடைந்தேன் .தொடரட்டும் தங்கள் பணி ......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு....

      Delete
  4. அருமை.... சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்....

    ReplyDelete
  5. //'தமிழ் என் தாய்மொழி...நான் படிச்ச என்ஜினீயரிங் ஒரு சப்ஜெக்ட்...படிச்சதை வைச்சு வேலை பார்க்கலாம். இலக்கியம் படைக்கமுடியுமா...' ன்னு கேட்டேன். // மிக சரி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன்.

      Delete
  6. தமிழ்மொழி.வலை

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  7. இப்பொழுதுதான் முதன்முறையாக இப்பக்கத்திற்கு வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சிறு வருத்தம். இப்பதிவில் இடையிடையே ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதியிருப்பதால் படிப்பதற்க்கு சற்று சிரமமாக இருக்கிறது.

    கோரிக்கை : ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தும்போது அவ்வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை எழுதி அடைப்புக்குள் அவ்வாங்கில வார்த்தைகளை எழுதுவீர்களேயானால் நலம் பயக்கும். உதாரணமாக, இணைய உலாவி(Web Browser).

    நன்றி.

    ReplyDelete
  8. நற்பணி ஆற்றினீர் நன்றி! வசிப்பிடம் ஊர், மாறியாச்சா!

    ReplyDelete
  9. ம்ம்ம்..நான் காலேஜ் ல படிக்கும் போது இப்படி கவிதை எழுதிதர யாரவது இருந்தால் தோழியரை கவிதையால் ஆட்கொண்டு நான் நானேதான் எழுதினேன் பின்னே மண்டபத்திலே யாரவது கொடுத்தியா எழுதிவந்தேன் சொல்லி பொற்காசுகளை அதாவது தோழியரின் அன்பை பெற்று இருப்பேன் என்ன செய்வது ....நாங்க காலேஜ் படிக்கும் போது தமிழை மறக்கல தமிழ் வரல ..

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி