Friday, 20 September 2013

வளையலின் வாசனையாய்...




நெளிந்துப் போயிருந்தது அந்த வளையல் 
கைகள் இறுக்கி, கழட்டி 
நெளிவு நிமிர்த்த நினைக்க 
நினைவில் வந்து போனாள் என் தாய்... 

அவளின் கைப்பார்த்த வளையல் இது 
அப்போதே சற்று நெளிந்துதான் இருந்தது   
இத்தனை வருடங்களாகியும் அமர்ந்திருக்கிறது 
என் மணிக்கட்டில் அலங்காரமாய்... 

நிமிர்த்தினால் 
வளைவு வடிவாகும்...  
விட்டுவிட்டால் 
தாயின் பிடிப்பு நிஜமாகும்... 

விட்டுவிட்டேன் 
வளையலின் வாசனையாய் என்னுடனே  
அவள் இருந்துவிட்டு போகட்டுமென்று...


7 comments:

  1. வளையலின் வாசனையாய் என்னுடனே
    அவள் இருந்துவிட்டு போகட்டுமென்று...

    பாசத்தின் மணம் மனதில் மணக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே...பெண்களாகிய நமக்கு அன்னையின் பாசம் என்பது ஒரு பொக்கிஷம் அல்லவா...நன்றி தோழி...

      Delete
  2. //விட்டுவிட்டேன் வளையலின் வாசனையாய் என்னுடனே
    அவள் இருந்துவிட்டு போகட்டுமென்று...//

    பாசமுள்ள வாசத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நன்றி நண்பா...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....