Thursday, 5 September 2013

ஈரம் சொட்ட நின்ற இலைகள்...



இருண்ட நீலவானை பிளப்பது போல் 
நெடிய மரத்தின் நீண்டிருந்த இரு கைகளும்
இருள் பூசிய இலைகளைச் சுமந்திருந்தன 

லேசான காற்றிற்கு 
கோரமாய் நிழல் பரப்பி
கருப்பு திவலைகளாய் சிதறியிருந்தன 
மழைக்கு ஒதுங்கியவளை 
முழுங்க எத்தனித்தன 

பெருமழை கண்ட பின்னும் 
பசி அடங்காதிருந்தன இலைகள் 
பயம் பின்ன விலகி
மழை நனைய நிற்கிறேன் 

மழையின் வீச்சுக்கு
இலைகள் நிழலிழந்து நீர் விட்டன 

நனைந்துவிட்டவளைக் கண்டு 
நகைத்து நீர் சொறிந்தன.. 



10 comments:

  1. /// பசி அடங்கவில்லை இலைகளுக்கு ...///

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. இலைகள் அசைவது சிரிப்பது போல உவமை நன்று. இரவின் நிகழ்விடத்தை படம் பிடித்து காட்டுகிறது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி நண்பா...

      Delete
  3. மரபு கவிதை ..அருமை என்ன தமிழ் சினிமா போல் 3 முறைக்கு மேல் படித்தால்தான் (என்னுடைய சிறிய மூளைக்கு )அதன் நிஜம் நிதர்சனமாக தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜன்...நிறைய படிங்க...

      Delete
  4. உதிர்க்கின்ற மழைத்துளியின் உரசலினால்
    விடுக்கின்ற ஓசைகளும் சிரிப்பலையாய்
    தொடுக்கின்றதே தன்னுணர்வுகளை இலைகளும்
    விடுக்கின்றதோ வாவென தூதுனக்கு...

    அருமையான கற்பனையும் அழகான சொல்லடுக்குக் கவியும்!
    உள்ளத்தை உரசிச்சென்றது இலையின் சிரிப்பலைகள்!...

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. மீதமாய் அடித்த உங்களின் சாரலும் அருமை...நன்றி இளமதி...

      Delete
  5. மழையில் நனைந்த இலைகள் - அழகு !!!

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....