Skip to main content

ஏணியாய்...



மின் வேலை செய்யத் தான் வந்தான் அவன்...

அவனுக்காகவே தைக்கப்பட்டதுப் போல்  
நிறையப் பைகள் வைத்த நீலவண்ண காற்சிராய்
அவனுடைய வேலைக் கருவிகளின் அஞ்சறைப் பெட்டியாய்  
அதன் மடிப்புகளில் அழுக்கு அடைந்திருக்கிறது...

முக்காலி மேல் முக்காலி அடுக்கி
அதன்மேல் விந்தையாய் விழாமல் நிற்கிறான்...

இட்லிக்கும் தேநீருக்கும் வயிறு சற்று உப்பியது
அவ்வளவே...
மற்ற நேரம் மெலிந்தே இருந்தான்...

அறிவொளி நகரில் வீடு என்றான்
மின்னறிவு அதிகம்தான்
நூறு போறும்க்கா என்றான்
என்ன செய்வாய் இதை என்றேன்
தம்பிக்கு ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கணும்
என் கணக்கு சரிதான்
இவன் ஏணி தான்...


Comments

  1. உண்மை...
    கவிதையின கதாநாயகனைப் இன்றைக்கு போல் எத்தனை இளைஞர்கள் யுவதிகள் ஏணியாய் இருக்கிறார்கள்...

    என்றுதான் தீருமோ வறுமை

    ReplyDelete
  2. பலரின் வாழ்வு இப்படித்தான்... அதுவே சந்தோசம்...

    ReplyDelete
  3. ஏணியாய் வாழ்பவர்களை நிச்சயமாக ஊக்குவிக்கும் உங்கள் கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  4. ஏணிகள் ஏற்றித்தான் விடுகின்றன. ஏறுவதில்லை...

    நல்ல வரிகள். ரசித்தேன்.
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete
  5. ஏணிக்கு ..எளிமையான ஒரு மகுடம் ..

    ReplyDelete
  6. குடும்பச் சுமைதாங்கியை ஏணியாகப் பார்த்ததே சுயமான சிந்தனை.
    சின்னச் சின்னச் சிதறல்கள் -நன்றாகவும் இருக்கும்; சரியானதும் கூட.திரைப்படத்துறையினர்தான் பெயர் வைக்கும்பொழுது எண்களின் ராசி பார்த்து ஒற்றெழுத்துக்களை விலக்கி விடுவர். நமக்கு அது தேவையா?
    வளர்க.வெல்க.

    ReplyDelete
  7. //என் கணக்கு சரிதான்
    இவன் ஏணி தான்...// இப்படி பல ஏணிகள் இருந்ததால்/இருப்பதால் சமுதாயம் முன்னேறுகிறது...அருமையான படைப்பு.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

பெண்ணென - பெண் படைப்புகளின் நிலை

பெண் படைப்பாளர்கள் தமிழ் இலக்கிய படைப்புலகம் கடல் போன்றது. நூற்றுக்கணக்கில் கவிஞர்கள் பாலின, வயது பேதமில்லாமல் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். காதல், சமூகம், அதன் பிரதிபலிப்புகள், இயல்புகள், பிரச்சனைகள் என்று அனைத்தையும் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஒருவரின் முதல் தொகுப்பாக வெளிவரும் புத்தகத்தில் இருக்கும் கவிதைகள் கூட தேர்ந்தேடுக்கப்பட்டவைகளாக வாசிக்க தகுந்தவைகலாக இருக்கின்றன. அதற்கு மூத்த கவிஞர்கள் சில பல விதிமுறைகளுடன் உதவி வருவதையும் காணமுடிகிறது இங்கு. ஒருகாலத்தில் சிற்றிதழ்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள் போன்றவற்றில் எழுதி அனுப்பிக் கொண்டே இருந்து சலித்துப்போன கவிஞர்கள், காலமாற்றம் காரணமாக இன்றைய கவிஞர்கள் (வயது வித்தியாசம் இல்லை) இணையத்தின் வழி செய்வதை கண்டு வியப்பதில் ஆச்சரியமில்லை. முகநூலில், இணையங்களில் விருப்ப குறியீடுகளின் மதிப்பீட்டில் வாழும் பெரும்பாலான கவிஞர்கள் அதிலிருக்கும் விமர்சனங்களையும் ஏற்கிறார்கள். அங்கு எழும் 'ஆஹா, ஓஹோ' வுக்கும் ஏமாறுகிறார்கள். தனிதனி குழுக்கள் அமைத்து எல்லோருடைய கவித்திறமைகளையும் வளர்க்கிறார்கள். அவற்றில் நடத்தப்படும் போட்டி