Wednesday, 10 July 2013

சித்திரமாய்...




அமிலத்தைக் கொண்டு 
பெண்மையைச் சிதைக்க 
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... 

அதை விற்க தடை கோரி 
ஏழு வருடமாய் தவமிருக்கிறது
இன்னொரு கூட்டம்... 

சட்டம் இயற்றச் சொல்லி 
பதினோரு வாரமாய் காத்திருக்கிறது 
வழக்காடு மன்றம்... 

தண்ணீர் விடுத்து 
அமிலம் கொண்டு 
தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
ஒருவேளை 
சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?....

15 comments:

  1. //அமிலத்தைக் கொண்டு
    பெண்மையைச் சிதைக்க
    அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... ///

    அலைந்துக் கொண்டிருக்கிற கூட்டம் மிருக கூட்டம். அதை காப்பாற்ற முயற்சிக்குது திருட்டு கூட்டம்..


    பெண்வதையை விட மிருகவதையை பாதுகாக்க நாட்டில் சட்டம் இயற்றுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியே இதுதான்...

      Delete
  2. பெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்கள் உண்டு, அவள் எவருக்கும் கைப்பாவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளும் நாளில் தான் இத்தகைய கொடுமைகள் தீரும்.

    ReplyDelete
    Replies
    1. பெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கு காதலும் அதையடுத்து தோல்வியின் மீது கோபமும் இப்படிப்பட்ட விபரீதங்களும் நடக்கத்தானே செய்யும்....

      Delete
  3. அருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்...

      Delete
  4. தூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப சொல்ரீங்க...தூங்குர‌மாதிரி நடிக்கிற சட்டம்?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை நம்மால் என்ன செய்ய முடியும்?

      Delete
  5. .. தண்ணீர் விடுத்து
    அமிலம் கொண்டு
    தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
    ஒருவேளை
    சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?.... ..

    நல்ல சாட்டையடியான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சங்கவி....

      Delete
  6. அருமையான கேள்வி பதில் தான்?????

    ReplyDelete
    Replies
    1. யாருக்குத் தெரியும்...

      Delete
  7. உருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத்தவோ, இந்ஹ்டப் பிரச்சினையை சரி செய்யவோ முடியாது.

    இதுபோல் தவறு செய்றவங்களை நடு ரோட்டில் தூக்கில் போடணும்! இல்லைனா நடுத்தெருல சுட்டுக் கொல்லணும்!

    ஜெயலலிதா போன்ற பெண்கள் ஆளும்போது தமிழ்நாட்டில் அது போல் சட்டம் கொண்டு வரணும்.

    நம்ம எதுல முன்னேறி இருக்கோம்? எதில் நம்ம முதன்மையாக இருக்கிறோம்? னு பார்த்தால் இது போல் மிருகத்தனமாக பெண்கள் மேலே அமிலத்தை ஊத்தும் செய்லகளில் உலகத்திலேயே முன்னிலையில் இருக்கோம்!! நமக்கு முன்னால யாரு இருக்கானு பார்த்தால் பங்லாதேஷ்!

    ReplyDelete
    Replies
    1. நிஜமே வருண்...
      அரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லாம் சாதகமாக வேண்டும் அவற்றை மட்டுமே சட்டமாக்கி பழகி விட்டார்கள். மற்றவற்றை பற்றி துளியும் யோசிப்பதில்லை. பெண்களின் மேல் வைக்கப்படும் வஞ்சம் என்பது அமிலத்தின் வாயிலாக தான் இந்த சமுதாயத்தில் வீசப்படுகிறது....

      நன்றி...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....