Monday, 6 May 2013

வண்ணமிடாத கல் கோபுரம்...



கண்களை கடந்த அனைத்திலும்
வண்ணங்கள் கலந்திருக்க
அந்த கோபுரம் மட்டும் வண்ணமிடப்படாமல்
நான்தான் கல்லான கோபுரம் என்றது...

அதன் நிமிர்ந்த பார்வை
கலப்படம் இல்லாத கம்பீரத்தை காட்டியது...

வண்ணங்களை பூசிக் கொண்ட மனிதர்களை
இகழ்வாய் பார்த்தது...

சிற்பியின் உளி உடைத்த இடங்களை
புடம் போட்டு காட்டியது...

முகமூடிகள் கொண்டு முகங்களை மறைக்காமல்
தவறை தவறென்று ஒப்பும் மனதை கொடுத்தது...

வண்ணமிடாத கல் கோபுரம்தான்
வாழ்வின் வண்ணத்தை காட்டிவிட்டு
என்னை கடந்துச் சென்றது...

10 comments:

  1. அருமை...

    கல் கோபுரத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்..

      Delete
  2. வாழ்வின் வண்ணத்தை காட்டிவிட்டு

    வண்ணமிடாத கல்கோபுரம் ரசிக்கவைத்தது ..

    ReplyDelete
  3. அருமை... வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு ...

      Delete
  4. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


    தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களின் தகவலுக்கு...

      Delete
  5. அது அப்படியும் அழகாய்தான் இருக்கிறது.கவிதை நன்று

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....