Monday, 27 May 2013

அவனின் வருகைக்காக...




உதிர்ந்து போன குவளைப் பூக்களின் 
வண்ணம் உதிரா இதழ்களும் 
காய்ந்து போன இலைச் சருகுகளும் 
புளியங்காய்களும் உடைந்த குச்சிகளும்
மனிதர்கள் விதைத்துவிட்டு போன குப்பைகளும்
குடியிருப்பின் சாலை முழுவதும் 
அவனின் வருகைக்காக....

இரு கைகளுமே நீண்டது போல் 
நீளமான துடைப்பங்களை வைத்து 
குப்பைகளைக் குவிக்க 
அவன் செய்யும் வித்தைகள்...

குறுகலான பாதையில் நேர்க்கோட்டிலும்  
பரந்த இடங்களில் வலது இடது கைகளை  
குறுக்கும் நெடுக்குமாக மாற்றி 
அவை இடையில் மாட்டிக்கொள்ளும்
சாத்தியக்கூறுகளை நம்முன் வைத்து   
பின் அதை பொய்யாக்கி   
சூரியனின் வெளிச்சத் துண்டுகளை விடுத்து 
மற்றவற்றை கூட்டிச் செல்லும்
அவற்றின் லாவகம்
ஒரு அதிசயம்தான்....

சாலையின் புழுதிகளும் கூட  
இனி அவனின் வருகைக்காக...


10 comments:

  1. சூரியனின் வெளிச்சத் துண்டுகளை விடுத்து
    மற்றவற்றை கூட்டிச் செல்லும்
    அவற்றின் லாவகம்
    ஒரு அதிசயம்தான்....?????

    ReplyDelete
    Replies
    1. மரங்களில் உள்ள இலைகளின் நிழல் தவிர்த்து தரையில் விழும் சின்ன சின்ன வெளிச்சங்கள்....

      Delete
  2. //அவனின் வருகைக்காக...// தலைப்பும் படைப்பும் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1908.html ”பூபாலன்” என்ற தலைப்பில் ஓர் சிறுகதை எழுதியிருந்தேன். முடிந்தால் படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி...படித்தேன்...அருமை..

      Delete
  3. Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  4. அழகிய கவிதை... வித்தியாசமான பார்வையில் ஒரு கவிதை..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சௌந்தர்....

      Delete
  5. எதையும் அருமையான படைப்பாக்கிவிடும்
    தங்கள் கவித்திறன் பாராட்டத்தக்கது
    பாயாசத்து முந்திரியாய் எப்படியும்
    கவிதைக்குள் வந்து விழுந்த உவமைகள்
    அதிகமாய் மனம் கவர்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....