Tuesday, 2 April 2013

விடியலின் வாசிப்பு....




உன் மௌனத்தின் வாசிப்பு தருணங்கள் அதிகமாகவே படுகிறது எனக்கு...  
நெருக்கங்களை இழந்த அந்த நிமிடங்களில்
உயிர் மட்டுமே சஞ்சரிக்கிறது கனவுகளின் மிச்சங்களில்...

நிஜங்களில் பேசப்படாத அந்த அன்பு
நினைவுகளில் பின்தங்கப்படும் சாத்தியக்கூறுகளை  அதிகமாய் சுமக்கிறது...  

உடன்படாத மனம் விலகச் சொல்கிறது
உடன்பட்டு போன உணர்வோ மறுக்கிறது வாதத்தை...

நிலவின் நேரங்களில் கண் முழித்து
அதில் என் தேரோட்டியை தேடும் போது
துருவமாய் தோன்றி மறைகிறான் அதிகாலையில்...

விடியலின் போது தோன்றும் கனவுகள்
வெளிச்சத்தை காட்டவில்லை....
முடித்துக் கொள்ளலாம் கனவுகளை
இல்லையென்றால் மௌனங்களை
இனிவரும் விடியலாவது வெளிச்சமாகட்டும்....





11 comments:

  1. /// நிஜங்களில் பேசப்படாத அந்த அன்பு..
    நினைவுகளில் பின்தங்கப்படும் சாத்தியக்கூறுகளை அதிகமாய் சுமக்கிறது... ///

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்....

      Delete
  2. நேராக படிப்பவர்களின் உணர்வைத் தொடும்
    ஆழமான கவிதை
    தொர்ந்து கவிதைகளில் உச்சம் தொட
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எழுதபாடாத சிந்தனைகள் நினைவுகளின் வலியா இல்லை கனவுகளின் கலையாத மௌனங்களா எதுவாயினும் உணர்வு பூர்வமான வரிகள் ..நன்றாக இருக்கிறது சில வரிகள் எதார்த்த எண்ண ஓட்டங்களை நாடி பிடித்து பார்ப்பதால் மனதில் ஒரு புரியாத வலியும் வருகிறது சூப்பர்

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி நண்பா....உங்களின் கவிதை படித்தேன்.. அருமை...

      Delete
  5. ஆகட்டும் ஆகட்டும்
    என்றாவது ஒருநாள் அகப்படட்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....அதுக்கும் கவிதை எழுதுவோம்...

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....