Monday, 25 March 2013

என் வெண்புறாவே...



இந்த வசிப்பிடம் உறுதி உனக்கு
இவ்விடம் எனக்கு நிரந்தரமில்லை
நான் புலம்பெயரும் நாள் நெருங்குகிறது...
இத்தனை நாட்களாய் என் சிநேகிதத்தில்
நீயும் உன் துணையும்...


என் வீட்டின் உத்திரம் உனக்கு என்றபோது
நான் உன்னை எதிர்த்ததில்லை...



என் கவிதைகளை உன்னை சுற்றி பிணைத்து 
உன்னை தமிழ் சுவாசிக்க வைத்திருக்கிறேன்...  

நான் சொல்லி சென்ற கதைகளை
கம்பியில் அமர்ந்து பொறுமையாய்
கழுத்து சாய்த்து கேட்டிருக்கிறாய்...
உறவின் உன்னதத்தை
அறிந்தவன் நீ...
  

காலை வேளைகளில்
நீ படபடத்து பறப்பதை
பார்த்திருக்கிறேன்...
மாலை வேளைகளில்    
உன் ஊடலையும் காதலையும்  
ரசித்திருக்கிறேன்...

இருவரும் ஜோடியாய் சுற்றிவிட்டு வந்து
இருட்டில் அடங்குவதும்
சில நேரங்களில் சத்தத்துடன் சண்டையிட்டு
ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருப்பதும்   
தெரியும் எனக்கு....



முற்றத்து விளக்குமாரின் குச்சிகளை உருவி
உன் கூட்டின் கூரையாக்கி இருக்கிறாய்...




உன் குஞ்சுகளின் கரைச்சல்
கேட்கும்வரை இங்கிருப்பேனோ
இடம் பெயர்ந்திருப்பேனோ தெரியவில்லை...



விலாசம் விட்டு செல்கிறேன்
கூட்டி வந்து காண்பித்துச் செல்...

~ இப்படிக்கு 
உன்னுடன் நட்பு வைத்திருப்பதால்
கேள்விக்குறிகளாய் பார்வைகளை சந்திக்கும் 
அப்பாவி அகிலா...



படங்கள் அனைத்துமே என் வீட்டில் என் இனிய புறாக்களுடன் எடுத்ததுதான்......


15 comments:

  1. மிகவும் அழகான உணர்வுகள் கவிதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன

    பாராட்டுக்கள். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்களுக்கு...

      Delete
  2. இனிய வரிகள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ரமணி ஐயா ...

      Delete
  4. அழகு... அருமை...

    வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    வாழ்த்துக்கள்...

    ஆமாம்... படங்கள் எங்கே எடுத்தீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. இது உண்மை கதை தனபாலன்...என் வீட்டு புறாதான் இது. என் மொபைல்ளில் எடுத்ததுதான்...

      Delete
  5. நாட்கள் நகர தொடங்கிவிட்டன ஆனாலும் உங்கள் மனம் எண்ணிப் பார்க்கின்றது எத்தனை எத்தனை கவிதைகளுக்கு கருவாய் அமைந்த இணைகள்(நீங்களும் புறாக்களும்) பிரிந்து வேறு இடம் புலம் பெயர்ந்தாலும் அங்கேயும் மொட்டை மாடியில் உன்னைதேடும் நினைவுகள் புறாவே நீயும் ஒரு நாள் பிரிவினை சந்திக்கும் நிலை வந்தால் அப்போது பிரிவின் துயரத்தில் உணர்வுகளை மீட்டி நான் வரைந்த பிரிவின் கவிதை அபொழுது உனக்கு புரியும்
    சாதாரண நிகழ்வு யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை..ஆனால் பிரிவு எனபது நெஞ்சினை சுடுகிறது. கவிதையின் முன் பகுதி வரிகள் இயல்பான நிகழ்வாக இருந்தாலும் பின் பகுதி உணர்வு பூர்வமானது அருமையான படைப்பு வணக்கங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. புரிந்த பிறகு பிரிதல் என்பது சற்று கடினமான விஷயம்தான்...நன்றி ராஜன்...

      Delete
  6. விலாசம் விட்டு செல்கிறேன்
    கூட்டி வந்து காண்பித்துச் செல்.....//

    அருமை படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி பூவிழி....

      Delete
  7. அழகான ஆழமான உணர்வை
    வெளிப்படுதின விதம் அருமை... அகிலா மேடம்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....