Monday, 28 January 2013

கவிதையின் மறுபக்கம்....





உதறவும் முடியாமல் 
உள்வாங்கவும் முடியாமல் 
ஆரம்பத்தின் முதற்சுழியாய் 
முடிவில்லா சுழலாய் 
காலை சுற்றுகிறதே இந்த காதல்....

உச்சந்தலை முதல் 
உள்ளங்கால் வரை 
பாலாங்குழியில் மாறி மாறி 
உருளும் குந்துமணியாய் 
ஓடிக்கொண்டிருக்கிறதே....

கண் மூடி உலகம் மறப்பேனா....
கண்திறந்து உன்னை பார்ப்பேனா....
என் செய்வேன்.....

'அம்மா.....காய் வேணுமா?'...
ம்ம்ம்...
சமையலை பார்ப்போம்....
மீதியை மாலை முடிப்போம்....
பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம்.... 


17 comments:

  1. உதறவும் முடியாமல் உள்வாங்கவும் முடியாமல் இருப்பது காதல் அல்ல உறுத்தல்,உறுத்தல்களாக தோன்றி விட்டாலே கடலாய் தோன்றியது துழி வெள்ளமாக போய் விட்டநிலையில் கவிதையின் காதல் நினைவுகள் சுபலமாக காய்கறி காரனாலும் கூட கலைக்க முடிகிறது என்றால் இது உதற பட்ட உள்வாங்க படாத காதல் ஆகத்தான் இருக்கும்.இல்லையா கவிதையின் நாயகியின் நிலைப்பாடு அருமையாக வெளிப்படுத்தி இருகிறீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. ம்ம்ம் ..அருமைங்க

    ReplyDelete
  3. எப்படி சகோ இப்பூடீ... ம்

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்றது....நிஜமா இப்படிதான் நடக்குது....

      Delete
  4. கவிதை மிகவும் அருமையாக யதார்த்தமாக இருக்கிறது

    //'அம்மா.....காய் வேணுமா?'...
    சமையலை பார்ப்போம்....
    மீதியை மாலை முடிப்போம்....
    பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம்..//

    அந்த காய்கறி காரன் உங்கள் கற்பனை வளத்தை மட்டும் இல்லாது எங்களுடைய கவிதை சுவ்ராசியமாக படித்து கொண்டிருக்கும் தன்மைக்கும் தடையாகிபோனது தான் உண்மை தொடருங்கள் அதன் அடுத்த பாகம்தனை எதிர்பார்த்து இருக்கிறோம் கவிதைகளில் உணர்வு பூர்வமான கவிதைகள் என்றுமே மனதினை தொடுபவை ஆனால் அதை வடிவமைக்கும் கவிஞனரின் கைவண்ணம் தான் அதற்கு முழுமையை தரும் அருமையான கவிதை வாழ்த்துக்கள். ....

    ReplyDelete
  5. கனவுகளுக்கும் நிஜங்களுக்குமாக ஊசலாடுவதுதான் பெண்களின் இன்றுவரையிலுமான நிலையாயிருக்கிறது.. இது மாறும்.
    // சமையலை பார்ப்போம்,
    மீதியை மாலை முடிப்போம்,
    பத்திரிகைக்கு இரவு மெயில் பண்ணலாம் // கடைசி வரிகள் மனதை செருகி நிற்கின்றன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தானே நிஜத்திற்கும் கற்பனைக்கும் நடுவில் வாழ்கிறோம்....நன்றி தியாகு....

      Delete
  6. கற்பனையில் மூழ்கும்போதே, யதார்த்தத்தையும் நினைத்துப் பார்த்தது நன்றாக இருக்கிறது, அகிலா!
    காலைச் சுற்றும் காதல், பல்லாங்குழி (இதைதான் பாலாங்குழி என்கிறீர்களா?) யில் மாறி மாறி உருளும் குந்துமணியாய் ஓடினாலும், காய்கறிகாரன் தான் நிஜம்!

    அருமையான கவிதை!
    பாராட்டுக்கள் அகிலா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். குந்துமணியை பொய்த்து காய்கறிகாரனை நிஜபடுத்துவதுதானே வாழ்க்கை....நன்றி மேம்...

      Delete
  7. சிறுகதை போல அழகிய கவிதை ...அருமை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி நண்பா...

      Delete
  8. காதல் ஒரு சுகமான வலி

    ReplyDelete
    Replies
    1. காதல் எப்போவுமே சுகமானதுதான்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....