Skip to main content

மழைதுளியாய்....


ஒரு முத்தம்....


கர்ப்பக்குளத்தில் எதிர்நீச்சலாய் முதல் முத்தம்
பதினாறு வயதில் பருவத்தின் யுத்தமாய் ஒரு முத்தம்
இருபதுகளில் மழலையின் பிஞ்சு முத்தம்
நாற்பதுகளில் வளர்ந்த பிள்ளைகளின் அவசர முத்தம்
ஐம்பதுகளில் மாமியாரின் அன்பு முத்தம்
என்றென தெரியாத மண்ணின் கடைசி முத்தம்  

சுவாசமாய் தொடங்கும் பயணத்தில்
சுவாரசியமாய் சிலிர்ப்பாய்
அன்பாய் அனாயாசமாய்
அர்த்தமாய் ஆசையாய்  
என்று எத்தனையோ முத்தங்கள்.....

எத்தனை எத்தனை முத்தங்கள்
உன்னை முத்தமிட்டாலும்  
உன்னை உயிராக்கிய உன் தாயின்
முதலும் முடிவுமான முத்தத்திற்கு
சிலிர்ப்பாய் உன் முகம் தொடும்  
வானின் நீர்த்துளி கூட ஈடாகாதே...Comments

 1. அன்னைக்கு இணையாக எதுவும் இல்லையே..சிறப்புங்க.

  தங்கள் கவிதைத் தொகுப்பையும் புத்தக கண்காட்சியில் வாங்கிவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சசி...ரொம்ப நன்றி....போடோஸ் பார்த்தேன்....நன்றாக இருந்தது...

   Delete
 2. தாயின் முதல் முத்தத்தின் அருமை சேய்க்கு தெரிய வாய்ப்பு இல்லை ஆனால் சேய் வாலிப பருவம் வரும்போது பெரும் "உன்தையும் எந்தையும் யார்யாரோ ,ஆனால் உன் முத்தமும் என் முத்தமும் வேறரோ"என்று சந்தோஷிக்கும் கணங்களை விட அவர்கள் தாயாகவோ தந்தையாகவோ மாறும்போது தன சேய்க்கு கொடுக்கும் முதல் முத்தத்தில் தான் தனுடைய தாயின் முத்தத்தின் அருமையை உணருகின்றனர்
  ஆனாலும் தாயன்பினை பட்டினத்துஅடிகள் போல மழலை பருவம் விடலை பருவம் மட்டும் இல்லாது அவர்களின் ஒவ்வாரு நிகழ்விலும் உங்கள் கவிதைகள் பிரதிபலிகின்றன ..அருமையான உணர்வு மிக்க தொகுப்பு பாராட்டுக்கள்

  ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

தவ்வை நாவல் குறித்து எழுத்தாளர் எஸ் ரா அவர்களின் பக்கத்தில்..

தவ்வை - புதினம் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் 2022யில் தான் வாசித்தவற்றுள் சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவரது வலைத்தளத்தில் கொடுத்துள்ளார். அவற்றுள் எனது நாவலான தவ்வை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மகிழ்வும் அன்பும் 🙏 லிங்க் 👇 தவ்வை