Tuesday, 1 January 2013

பேப்பர் பையன்...




கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள்
'அக்கா' என்று தலைசொறிந்து சிரித்தான்...
உனக்கும் சம்பந்தம் இல்லை
எனக்கும் உடன்பாடு இல்லை
எதற்கு அதற்கு காசு என்றேன்
என்னை முறைத்துவிட்டு போய்விட்டான்....

நேற்று வந்தபோது ஒரு பார்வை
பார்த்தான் என்னை
சிரித்து வைக்கவா வேண்டாமா என்று...
'என்ன' என்றேன்...
'ஒண்ணுமில்லைக்கா' என்றான்
'ம்ம்ம்...'என்று சொல்லி சைக்கிள் நகர்த்த தயாரானான்...

அவனை நிறுத்தி
அவன் கையில் ஐம்பது ரூபாயை அழுத்திய போது
அழகாய் சிரித்தான்...
அவன் பிறந்த தினம் கேட்டபோது
புரிந்து சிரித்தான்...
சொல்லிவிட்டு போனான்...


13 comments:

  1. அவனிடம் இல்லாததை கொடுக்கும் போதுதான் சந்தோஷமா தெரியும். தீபாவளி, பொங்கல் சமயங்களில் ஆபிஸ் பாய், துப்புறவு செய்பவர்களுக்கு நான் பணம் கொடுப்பேன்.. அப்ப அவங்க முகம் புதுசா மலரும்..! என்ன பண்ணுவது ஏழையிலிருந்து பணக்காரன் வரை பணம்தான் சந்தோஷம் என்று நிறைய பேர் போய்கிட்டிருக்கோம்! ஏழைக்கு நூறு ரூபா காணும் போது நமக்கு லட்சங்களில்.. இப்படி அளவுதான் வித்தியாச படுது. நல்லதொரு அனுபவ கவிதை! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவனை பொறுத்தவரை அது பெரிதுதான்...நன்றி உஷா...

      Delete
    2. ///நமக்கு லட்சங்களில்//
      உஷா மேடம் நீங்க பெரிய ஆளுதான் போலிருக்கே?
      //ஏழைக்கு நூறு ரூபா//

      நூறு ரூபா எனக்கு வந்து சேரவில்லையே????

      Delete
  2. அனுபவத்தை கவிதையாக சொன்ன விதம் அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு...

      Delete
  3. எவ்வளவுதான் வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் பலர் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்..
    சின்னதொரு புன்முறுவல் செய்வதாயினும் சரியே

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆத்மா...உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

      Delete
  4. உஷாவின் கருத்தை வழிமொழிகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துக்கள் எழில்....

      Delete

  5. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிஞரே....

      Delete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா....என் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....