Sunday, 17 June 2012

தகப்பன் சாமி....

தகப்பன்தான் சாமி.....



காலையில் எழுந்ததும் மடங்கிய கை கால்களை நிமிர்த்த முடியாமல் வலி 
சன்னலின் வழி எப்போதும் ஒரே சம்மணத்தில் இல்லத்தின் வாயிலில் பிள்ளையார்


'வாங்க காப்பி சாப்பிட்டுட்டு வரலாம்' என்று மனைவி
மூர்த்தியின் காப்பியுடனும் ஹிந்து பேப்பருடனும் முன் வாசல் நாற்காலியில்...

'என் article பேபரில் வந்திருக்கு..., படிங்க....' என்று போகிற போக்கில் கோபாலய்யர்
'வாக்கிங் வரலையா?....' என்று பாஸ்கரன் 
'மனசு சரியில்லை...'பொத்தம் பொதுவான என் பதில்
'மகன் நினைப்பா....' இது பத்மாவதி அம்மாள்


இந்த கேள்விகளுக்கு பிறகுதான் உள்ளே அழுத்திய மகனின் நினைப்பு வெளி வந்தது
'இந்தியாவுக்கே திரும்புவதில்லை' என்ற மருமகளின் தீர்மானமும் நிழலாடியது 
பசங்க அங்க பழகிட்டாங்க, படிப்பு இங்க சரியில்ல...என்ற மாதிரியான ஓட்டை காரணங்கள்


'ஏன் கிடைக்காதற்காக ஏங்குறீங்க?...இங்கே நம்மை மாதிரி எத்தனை பேர்....' மனைவியின் யோசனை 
பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது
இல்லை நாம்தான் பழமைவாதியாகவே  இருக்கிறோமோ...தெரியவில்லை...


மீண்டும் மகனின் நினைப்பு மனதில் 
சிறு பருவத்தில் அந்த கண்களில் தெரிந்த குறும்பு 
வாலிபத்தில் கண்கள் தாழ்த்தி பார்த்த ஓரப்பார்வை
திருமணத்திற்குபின் சரிசமமான நிமிர்ந்த ஒரு பார்வை 
தள்ளி சென்றபின் அவன் கண்களில் தெரிந்த வெறுமை 
தன்னருகில் அவனை இருத்தி, தலை கோதி,
அவன் கைபிடித்து, அதில் முத்தமிட்டு,
முகம் புதைக்க ஆசை வந்தது...


கைப்பேசி கிணுகிணுத்தது 
'அப்பா...Happy Fathers Day...'
அவன் குரல்....
கண்ணீர் என் கண்களில்... 
வாசல் பிள்ளையார் சிரிப்பில்....





17 comments:

  1. மனதை தொட்ட பதிவு..

    ReplyDelete
  2. ஆண்களின் வலி வெளியே தெரியாது அதை அவர்கள் மனதுக்குள்ளே புதைத்து விடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. தன் பிள்ளைகளை பற்றிய கனவுகளும் ஆசைகளும் தாயை போலவே தகப்பனுக்கும் இருக்கும். ஆனால் வெளிக்காட்டாமல் அமைதியான நீரோடையை போல இருப்பார். நாமாகத்தான் அவரை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பார்....நன்றி....

      Delete
  3. நெகிழ்ச்சியான பதிவு.!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து பதிவுக்கு நன்றி....

      Delete
  4. வாடத் துவங்குகிற செடிக்குத்தான்
    வேரில் விழுகிற சொட்டு நீரின் அருமை தெரியும்
    பெருமழைக்குத் தெரிய வாய்ப்பில்லை
    உங்கள் சிந்தனைத் திறத்தின் உயரம் காட்டும்
    அருமையான பதிவு
    உங்கள் உயரத்திற்கான பதிவுகளை அதிகம் எதிர்பார்த்து...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே....

      Delete
  5. கைப்பேசி கிணுகிணுத்தது
    'அப்பா...Happy Fathers Day...'
    அவன் குரல்....
    கண்ணீர் என் கண்களில்...
    வாசல் பிள்ளையார் சிரிப்பில்....

    என் கண்களிலும் நீர் அரும்புகள் ,
    அழகான வடிவமைப்பு ,
    அன்னையர் தினத்துக்கு பதிவுகள் அநேகம் ,
    தந்தையர் தினத்துக்கு தேட வேண்டி உள்ளது .
    நன்றி ,சகோதரி

    ReplyDelete
    Replies
    1. ஒரு முதிய தம்பதியரின் உண்மை கதைதான் இது....தந்தையர் தினம் வாழ்த்து மட்டும் தான் நான் இணைத்தது...
      நன்றி...

      Delete
  6. உள்ளம் கவர்ந்த பதிவு

    பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி...

      Delete
  7. மனைவியின் யோசனை
    பெண்களால் எப்படி தன்னை மாற்றி கொள்ள முடிகிறது
    இல்லை நாம்தான் பழமைவாதியாகவே இருக்கிறோமோ...தெரியவில்லை...

    ஆண்களின் மனம் பேசுவதை
    அழுத்திக் காட்டியிருக்கிறீர்கள் அகிலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் நம் குடும்பங்களில் சந்திக்கும் ஆண்களின் மனநிலை இப்படிதானே இருக்கிறது....

      நன்றி...

      Delete
  8. நெகிழ்ச்சியான பதிவு அகிலா மேடம்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....