Wednesday, 15 February 2012

இதயம்.....


காலி இல்லை........



art by me......




சின்ன சின்ன பூக்களில் சிதறி கிடக்கும் காதல்

பட்டாம்பூச்சியின் சிறகுகளில் படபடக்கும் காதல் 

வானவில்லின் வண்ணங்களில் தெளித்திருக்கும் காதல் 


கடற்கரை ஓரங்களில் களித்திருக்கும் காதல் 

கோவில் சிலைகளில் சித்திரமாய் காதல் 

கவிஞர்களின் கற்பனையில் காவியமாய் காதல்
 

அனைத்து இடங்களிலும் காதல் 

அவளின் இதயத்தை தவிர...









12 comments:

  1. நறுக்கென்ற வரிகளில் மனதில் தைத்தது கவிதை! காதலின் ஏக்கத்தைச் சொன்ன விதம் அருமை!

    ReplyDelete
  2. நேசமான உள்ளத்தில் வாசம் தேடும்
    அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன்....

      Delete
  3. காதலுக்கு இடமே இல்லை என்பதற்கும்
    இடம் காலியில்லை என்பதற்கும்
    வேறு வேறு பொருளில்லையா ?
    காதலுக்கு அனுமதியில்லை என்பதுவும்
    ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதுவும்
    வேறு வேறு இல்லையா ?
    கணேசன் சார் குழப்புகிறாரா
    நான் குழப்புகிறேனா ?
    காதல் இருக்குமிடங்களாக நாம்
    நம்பிக் கொண்டிருப்பவைகளை அழகாகச் சொல்லி
    இருக்க வேண்டிய இடத்தில் இல்லையெனச் சொல்லிப் போன
    முரண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இருவருமே குழம்பதேவையில்லை.....தலைப்பில்தான் சற்று குழப்பம்......நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்......

      Delete
  4. படம் வரைந்தது நீங்கள் என
    திரும்ப பின்னூட்டம் படிக்க வருகையில்தான் கவனித்தேன்
    அருமை அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அவர்களே.....

      Delete
  5. இருக்கவேண்டிய இடத்தில் இல்லாது, எங்கெங்கோ நிறைந்திருக்கிறது காதல். என்னத்தை சொல்ல? தாங்கள் வரைந்திருக்கும் படத்தைப்போலவே கவிதையும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை....
      வேண்டும்போதும் அமையாது.....
      தேடும்போதும் அமையாது...
      என்ன காதலோ இது.....

      நன்றி கீதமஞ்சரி....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....