Wednesday, 5 December 2012

நானும் என் பென்சிலும்...





எப்போதும் என் கைவசத்தில் 
இருக்கும் என் எழுதுகோல்
வேறு என்ன...என் பென்சில்தான்  
காணவில்லை...
மேஜையின் மேலும் கீழும் என்று தேடியும் 
கிடைக்கவில்லை....

சமைக்க உள்ளே சென்றால் 
மிக்ஸியின் அருகே 
அழகாய் சுவற்றில் சாய்ந்து நின்று 
என்னை பார்த்து சிரித்தது...
நிமிர்ந்து பார்த்தால் 
காலண்டரில் பால் கணக்கு.... 
உம்ம்ம்...

நீ இருக்கிறாய் 
என் ஞாபகங்களை பதிவு செய்ய... 
என் மறதி இருக்கிறது   
உன்னை வைத்த இடத்தை ஞாபகமாய் மறக்க... 

14 comments:

  1. எல்லோரும் இப்படித்தானே எதையாவது தேடிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. தொலைப்பதும் தேடுவதுமாக வாழ்க்கை...

      Delete
  2. எப்படி தோழி பென்சில் கூட இப்படி காதலாய் பேச முடிகிறது ...பென்சில் உன் பிரியத்திற்கு உரிய நண்பன் தானே அதை கொண்டு தானே மீட்டுகிறாய் வன்னகளில் ஓவியமாய் .....வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....என் வரைதலின் பின்புலமே அதுதானே...அதனால் தான் அதன் மேல் இவ்வளவு அன்பு...

      Delete
  3. அட....தேடலிலும் ஒரு சுகம் - சில மறதியும் பெரும் சுகம்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்...சில வேலைகளை செய்யாமல் இருந்துகொண்டு மறதியை காரணம் காட்டி தப்பித்து கொள்ளலாமே....

      Delete
  4. சின்ன சின்ன விசயங்களை மறக்கிறோம். அதுதான் முக்கியம் என்று தெரிந்தும்...

    ReplyDelete
  5. என் மறதி இருக்கிறது
    உன்னை வைத்த இடத்தை ஞாபகமாய் மறக்க..

    ஞாபகமாய் மறக்கும் சின்னவிஷயங்கள் !

    ReplyDelete
  6. ஞாபகமாய் மறக்குறீர்கள்....
    ரொம்ப வித்தியாசமான வார்த்தை

    ReplyDelete
  7. உங்கள் கையில் இருக்கும் பென்சிலுக்கும் ஒரு கவிதையா! ஆஹா! என்ன பாக்கியம்!
    அதனால் தான் சுவற்றில் சாய்ந்து நின்று சிரித்ததோ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கும்...இருக்கும்...குறும்பு அதிகம்....

      Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....