இன்று கணவரின் Batchmate மகளின் திருமணம் திருப்பூரில். அவரை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. சமாளிப்போம் என்று அழகாக போய் அமர்ந்தாச்சு...
இப்படிப்பட்ட கல்யாணங்களுக்கு போவதில் நிறைய சௌகரியம் இருக்கு...
வாய் வலிக்க பேச வேண்டியதில்லை...
போலித்தனமாய் சிரித்து வைக்க வேண்டியதில்லை...
நல்ல வேடிக்கை பார்க்கலாம்...
நிறைய பேர் வெட்டியாக சுற்றி கொண்டிருந்தார்கள். நாமளும் அப்படி வெட்டியாக உட்கார்ந்து பார்த்தால் தானே தெரிகிறது.
ஒரே கலரில் பட்டு கட்டி நாங்கள் சாகும்வரை சகோதரிகள் என்று மூன்று பெண்மணிகள் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
saree யை flaot விட்டுக்கொண்டு ஒரு பெண் சுற்றி கொண்டிருந்தாள். நாமளும் இனி float ல் saree கட்டி பழகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்னை மாதிரியே தனியாக அமர்ந்து ஒருவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பித்தது....
சரி...போய் கிப்ட் கொடுத்துட்டு வரலாம் என்று எழுந்து போனேன்...கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவரையும் காணும்...நாமலே intro கொடுதுக்க்கலாம்னு போனேன்...
பெண்ணிடம் போய் நான்தான்...இப்படி...இப்படி.. என்று கூறினேன். அவள் உடனே, 'மாமா வரலையா அத்தை...மாமாவை திருப்பி மயிலாப்பூருக்கே போட்டுடாங்கலாமே...' என்று ஏதேதோ பேசிக்கொண்டே போக....நான் complete flat..
பெரும்பாலும் ஆன்டி, அங்கிள் என அழைக்கும் பெண்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். அழகாக தமிழில் அத்தை, மாமா என்று இப்போ இருக்கும் சிறு வயது பெண்கள் அழைத்து நான் கேட்டதில்லை..
அதுவும் அவள் என்னை நேரில் பார்த்ததில்லை...கேள்விபட்டிருக்கலாம் அவ்வளவுதான்....இது அவளின் பேச்சு சாமர்த்தியம், பழகும் சாமர்த்தியம் என்றெல்லாம் கூட சொல்லலாம்.
ஆனால் அந்த உறவின் பெயர்களை ஸ்டைல் காட்டாமல் நம் தமிழில் அழைத்த அந்த தன்மை புதிதுதான்...
அழகாக வளர்த்திருக்கிறார்கள் பெண்ணை....பாராட்டப்படவேண்டிய விஷயம்
தமிழும் இனிமைதான்...அதை அழகாய் பேசும் நம் ஊரு பெண்களும் இனிமைதான்...
அழகான ஒரு சம்பவம்....
ReplyDeleteஇந்தக் காலத்தில் இப்படியும் பிள்ளைகளா
அந்தப் தம்பதிகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
உங்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவர்களை சேரும் ....நன்றி...
Deleteஉண்மைதான் அகிலா, என் மகன்களும் “மாமி,மாமா” என்றுதான் எல்லாரையும் அழைத்துப் பேசுவார்கள். ஆண்ட்டி, அங்கிள்களால் நிறைந்த உலகத்தில் நகைப்புக்கு ஆளாகிறார்கள் என்றாலும் நான் மாற்ற முயலவில்லை.
ReplyDeleteநல்லது தோழி...மகிழ்ச்சியை கொடுக்கும் வார்த்தைகள் அவை...
Deleteநாங்கலாம் தெரியாத கல்யாணத்துக்கு போனால், திருப்பி வரும்போது ஒரு இருபது பேரையாவது சொந்தகாரங்களா ஆக்கிவிட்டுதான் வருவோம். நண்பர்களை சொன்னேங்க... நல்லா சிரிச்சி பேசி புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்வோம். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா???
ReplyDeleteஅருமையான ஒரு அனுபவத்தை அழகாக பகிர்ந்து இருக்கிறீர்கள். நன்றி.
பெண்களுக்கு பேச கற்றுக் கொடுக்க தேவையில்லை...பிறந்ததில் இருந்தே பேசிக்கிட்டுதானே இருக்கோம் (சாட்சி அப்பாவி கணவர்கள் )
Deleteநன்றி ஆகாஷ்....
சிறு வயதில் அவர்கள் கற்கும் விஷயம்தான் அவர்களுக்கு கடைசிவரையிலும் பாடமாக இருக்கும்.பெற்றோர்கள் குழந்தைகள்முன் பேசும்போது தமிழிலேயே பேச வேண்டும்.
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....
உங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி...
Deleteஆஹா...சபாஷ்
ReplyDeleteநன்றிங்க...
Deleteநாம் சொல்லுவதைதான் நமது பிள்ளைகள் சொல்வார்கள் அதில் நிச்சயம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி அவ்வாறு பேச சொல்லலாம்
ReplyDeleteஉண்மைதான் கண்ணதாசன்...நாம் சொல்லிக் கொடுப்பதை போலதான் வளர்வார்கள்....
Delete