தேடல்கள்...
அடையாளம் இல்லாத மனிதர்கள்
அடையாளம் தொலைத்த மனிதர்கள்
உணர்ச்சிகளின் உள் வாழ்பவர்கள்
ஒட்டுதலற்ற உறவுகள்
இவர்களின் உரசலில்
தேடல்கள் தொலைந்து போக
தொடங்கிய இடத்திலேயே நான்...
குப்பைதான்...
கண் மூடுதலும்
வாய் மௌனித்தலும்
இல்லாமல்
அனர்த்தங்களை அகற்றி
அசையா பொருளாய் அமர்ந்து
அதன்வழி புத்தனையும் சார்ந்து
துறவின் திறவுகோலை ஏந்தி
தேடல்களை முற்றுப் பெறச் செய்து
குடும்ப சமுத்திரத்தில் காலமாய்
குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன்....
நம் தேடல்கள் நிறைவு பெறாதவரை தேடல்கள் முடிவதில்லை
ReplyDelete//அடையாளம் இல்லாத மனிதர்கள்
ReplyDeleteஅடையாளம் தொலைத்த மனிதர்கள்//
அருமையான வரிகள்
வேறு வழியில்லை...
ReplyDelete