Tuesday, 6 November 2012

சின்னதாய்....


இப்போவே பள்ளிக்கூடத்துக்கு



குச்சியிலே கூடு கட்டி 
இலையிலே பாய்மரம் பறக்கவிட்டு 
அப்படியே துடுப்பு பாய்ச்சி 
பிறக்கிறதுக்கு முன்னாலேயே 
பறக்கவிட்டாளே எங்கம்மா, 
பிரசவத்திற்கு முன்னமே 
பள்ளிக்கூடத்தில சீட் போட்டுவச்சாப்பில...

~~~~~~~~~~~~*~~~~~~~~~~~


தாஜ்மஹால் 





வருடங்களாய் மனதில் உறுத்திய 
உன் காதலை மறக்க நினைத்து 
நிறைய போலிகளை தயாரித்து 
மேலும் மேலுமாக அடுக்கி 
விழாமல் இருக்க 
தாங்கும் தூண்களும் கொடுத்து 
அப்படியும் 
உன் நினைவுகளை மட்டுமே 
தாங்கிக் கொண்டிருக்கும் 
தாஜ்மஹாலாய் நான்....


8 comments:

  1. தாஜ்மகால் ஒப்பீடு சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி மது....

      Delete
  2. நீங்கள் செலக்ட் செய்திருக்கும் தாஜ்மகால் படமும். அதற்கேற்ற அருமையான கவியும் மிக ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டும் அருமைதான் கணேஷ்...

      Delete
  3. மிக அருமையான ஒப்பீடு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பதிவு செய்கிறேன்....நன்றி...

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....