Skip to main content

கனவில்....


காதல்....



கண்களால் சிரித்தாய்
கைகளால் அணைத்தாய்
இதழால் கவ்வினாய்
ஏதேதோ செய்தாய்..

காதல் கிறக்கத்தில்
கணநேரம் சென்றிருக்குமா
காமத்தீயில் தள்ளிவிட்டு
கண்ணடித்து சென்றாய்..

கனவில்லையென ஆசைப்பட்டு
கண்விழித்தேன்
கனவில்தான் என்று சொல்லி
என்னருகில் நீ....


Comments

  1. //காதல் கிறக்கத்தில்
    கணநேரம் சென்றிருக்குமா
    காமத்தீயில் தள்ளிவிட்டு
    கண்ணடித்து சென்றாய்..//
    மிகவும் அருமை!



    நம் தனிமையில்
    நீ எதையெல்லாம் என்னிடம் சில்மிசமாய் செய்வாயோ, அவையெல்லாம்
    அறியாதவனாய் இருந்து,
    என்னிடம்
    கற்றுக்கொள்வாயே திருடா!
    சரி போ…
    நீ கொடுத்தாலென்ன?
    நான் கொடுத்தாலென்ன?
    நமக்கு தேவை
    ஒற்றை முத்தம்தானே!

    மேலும் என் கவிதைகள் வாசிக்க! @ http://thottarayaswamy.net

    ReplyDelete
  2. அழகான கவிதை .....

    கனவிலாவது ;)))))

    ReplyDelete
  3. miga miga arumai.... en kaathal uranadai kavithaiyai padikka kaanavum www.nisu1720.blogspot.com

    ReplyDelete
  4. thangal kavithai arumai... en kaaadhal kavithaigalin thoguppinai vasikka @ http://nisu1720.blogspot.com/search/label/En%20Kaadhal

    ReplyDelete
  5. கனவில் தான் நடக்கும் போலே...

    ReplyDelete
  6. அகிலா மேடம்...
    காலையில் கனவு கண்டீர்களா...? அதுதான் உடனே பலித்துவிட்டது.

    ReplyDelete
  7. சில சந்தோஷங்களை கனவில் மட்டுமே அனுபவிக்கலாம் !

    ReplyDelete
  8. கனவில்தான் என்று சொல்லி
    என்னருகில் நீ....

    இறுதியில் தான் கனவின் ஏக்கம் அருமையாக பதிவாக்கியிருக்கிறீர்கள் அருமை

    ReplyDelete
  9. நன்றி தொட்டராயசுவாமி....

    ReplyDelete
  10. உங்களின் கவனம் என் கவிதைக்கு வந்ததற்கு நன்றி செய்தாலி.....

    ReplyDelete
  11. உங்களின் கவனம் என் கவிதைக்கு வந்ததற்கு நன்றி செய்தாலி.....

    ReplyDelete
  12. கனவில் தான் நடக்கும்...
    நன்றி வை கோபாலகிருஷ்ணன் அவர்களே...

    ReplyDelete
  13. சுகுமார்...படித்தேன் உங்கள் பக்கத்தை. எத்தனை காதல் கவிதைகள்....நன்று...

    ReplyDelete
  14. கனவு காதலுக்கு மரியாதையை அதிகம் தனபாலன்....நன்றி...

    ReplyDelete
  15. சரிதான் அருணா...இந்த விஷயத்தை பொருத்தவரை கனவு ஒரு சிக்கலான சொர்க்கம்தான்....நன்றி...

    ReplyDelete
  16. உண்மைதான் ஹேமா...கிடைக்கும் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறதுதான்...நன்றி

    ReplyDelete
  17. அருமையான கவிதை .. அழகான வரிகள்

    ReplyDelete
  18. நன்றி ராஜா....

    ReplyDelete
  19. நல்ல கனவுதான்.. சில்மிஷங்களுடன் கொஞ்சம் சேட்டையும்.. நல்லாயிருக்கு.

    ReplyDelete

  20. வணக்கம்

    சின்னச் சின்னச் சிதறல்கள்
    செந்தேன் மழையைப் பொழிந்தனவே!
    என்ன என்னக் கற்பனைகள்
    எண்ண எண்ணச் சுவைபெருகும்!
    பின்னப் பின்னச் சரமாகும்
    பீடாய் அகிலா கவிகண்டேன்
    தன்ன தான தானதன
    தமிழே மகிழ்ந்து விளையாடு!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  21. கண்டது கனவென்றாலும்...உற்றவர் அருகிலிருந்தால் கண்ட கனவை நினைவாக்கிவிட வேண்டியது தானே!

    #நம்ம சின்னபையன் இதை பத்தியெல்லாம் பேசக்கூடாதே? :)

    ReplyDelete
  22. கனவுகள் பல விதம் இது தனி விதம்

    ReplyDelete
  23. இக் கவியின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லைங்கோ

    ReplyDelete
  24. நன்றி விச்சு...

    ReplyDelete
  25. உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி கவிஞர் பாரதிதாசன்...

    ReplyDelete
  26. சின்ன பையன் சொல்லி பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லிட்டிங்க...நன்றி வரலாற்று சுவடுகள்.....

    ReplyDelete
  27. @மனசாட்சி.....அப்போ நீங்களா ஒரு தலைப்பு கொடுத்திருங்க.....நன்றி....

    ReplyDelete
  28. //கனவில்லையென ஆசைப்பட்டு
    கண்விழித்தேன்
    கனவில்தான் என்று சொல்லி
    என்னருகில் நீ....//
    அருமையான வரிகள் இனிமையான தருணங்கள்.... வார்த்தைகள் இல்லை ....

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந