Sunday, 2 September 2012

நீ என்




நீ என்...

நிலவென நினைத்து எட்டிப் பார்த்தேன்
தென்றலென நினைத்து தொட்டு பார்த்தேன்
பூவென்று நினைத்து பறித்து பார்த்தேன்
சங்கீதமென நினைத்து பாடி பார்த்தேன்
பசியென நினைத்து சாப்பிட்டு பார்த்தேன்
மௌனமென நினைத்து பேசிப் பார்த்தேன்
சந்தொஷமென நினைத்து சிரித்து பார்த்தேன்
ஒவ்வொன்றாக நினைத்தும் ஒன்றுக்குள்ளும் இல்லை நீ
உன்னிடமே கேட்டேன்
காதலென நினைத்து பார்
கச்சிதமாய் பொருந்துவேன் என்றாய்

காதலாய் நினைத்து பார்த்தேன்
சில்லென்ற காற்றை
உன் சிலிர்க்கும் கூந்தலை
அதில் சிரிக்கும் ஒற்றை ரோஜாவை
சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
குடையாய் நனையும் மரங்களை
நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை
அவசரமாய் கரையை தொடும் அலைகளை
நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை
காதலுடன் நினைத்து பார்த்தேன்
உன்னைத்தவிர அணைத்தையும் காதலாய் பார்த்தேன்
உன்னிடம் காதல் வரவில்லை கண்ணே....


12 comments:

  1. ம்ம் வித்தியாசம் :)

    //
    சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    //

    நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. அகிலா வரிகளில் நெளியும் வார்த்தைகளின் தேர்வு பிரமிக்க வைக்கிறது அருமை பாராட்டுக்கள்


    "சரிந்த கோடுகளாய் பெய்யும் மழையை
    குடையாய் நனையும் மரங்களை
    நெடுமரமாய் நிற்கும் ஒளிவிளக்குகளை

    நிலவை பார்த்து கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
    உறக்கம் கலையாதிருக்கும் படகுகளை
    கால்களை உள்ளிழுக்கும் மணற்பரப்பை"

    ரசித்தேன் இந்த வரிகளை ......

    காதல் வந்தாலே அனைத்தும் வந்துவிடும் அப்படித்தான தோழி ..........

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...உண்மைதான் சரளா...
      உணர்ந்துவிடலாம் அனைத்தையும்....

      Delete
  3. ரசனைக்குரிய விஷயங்கள் அனைத்தும் காதல் என்று வந்துவிட்டால் ஒத்துப் போவது விந்தையான விஷயம்தான். அருமையான, ரசிக்க வைத்த கவிதைங்க, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. காதலியை இரண்டாம்பட்சமாக்கும் இயற்கை ரசிப்புதானே...
      நன்றி பாலகணேஷ்...

      Delete
  4. வித்தியாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...வலைசரத்தை பார்த்துவிட்டேன்...

      Delete
  5. Nalvaalthu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  6. வார்த்தகளை வெகு கச்சிதமாகக் கோர்த்து கவிதை வரையும் உங்கள் பாணி மிகவும் நன்றாக இருக்கிறது, அகிலா.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்றி வேதா...

    ReplyDelete
  8. உங்களின் வருகைக்கு நன்றி ரஞ்சனி மேம்....

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....