உன் பொய்களை
மறக்கவும் மறுக்கவும்
எனக்கு உரிமைகள் உண்டு...
நெஞ்சத்துக்கு அருகில்
நிறுத்தவும் தூக்கவும்
எனக்கு நியாயங்கள் உண்டு....
யாராயிருந்தாலும் கருத்துக்கு
உடன்படவும் விலகவும்
எனக்கு சுதந்திரம் உண்டு....
அலையும் கண்களை
ஆதர்சிக்கவும் அடக்கவும்
எனக்கு அதிகாரங்கள் உண்டு...
ஆலிங்கனங்களை
ஏற்கவும் மறுக்கவும்
எனக்கு அனுமதிகள் உண்டு
பாரதியை நம்பக்கூட
பிறவிகள் பல தாண்ட
எனக்கு அகந்தையும் உண்டு...
ம்ம்ம்.. அருமை..
ReplyDeletethanx pa....
Deleteம்.. அப்படி போடுங்க
ReplyDeletehaha...thanx...
Deleteஅகந்தையும் உண்டு ஆணித்தரமான வரிகள் அருமை சகோ. சென்னையில் பதிவர் சந்திப்புக்கு வருகவென அன்போடு அழைக்கிறேன்.
ReplyDeleteநன்றி சசி.....அழைப்புக்கு நன்றி, வரலாம் என்றிருக்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கலாம்.....
Deleteபாரதியை நம்பக்கூட
ReplyDeleteபிறவிகள் பல தாண்ட
எனக்கு அகந்தையும் உண்டு...//
தன்னம்பிக்கையுள்ள ஒரு பெண்ணின்
சுய விமர்சனமாக இதைக் கொள்ளலாம்
பாரதியை நம்பக் கூட.... அருமையான
சொற்பிரயோகம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கையுள்ள ஒரு பெண்ணின்
Deleteசுய விமர்சனமாக இதைக் கொள்ளலாம் /// நிஜம்தான் அது.
நன்றி ரமணி அவர்களே....
ஞானச் செருக்குப் படைத்தவனை நம்புவதற்கான கால அவகாசத்தையும் பிறவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் பெண்ணின் மனச்செருக்கு அசத்துகிறது. மனமார்ந்த பாராட்டுகள் அகிலா.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி...
Delete