வேறுபட்டபோது....
உன் கண்கள் என்னை தேடும் போது
நான் எனக்குள்ளே தேடிக் கொண்டிருந்தேன்
என் தேவை என்ன என்று
அது நீ இல்லை என்று தெரிந்த போது
நீ எனக்குள் இல்லை – ஆனால்
நான் மட்டும் உனக்குள் இன்னும்...
தினம் உன் உருகுதலில்
நான் நனையவில்லை
உன் பார்வையில்
என் பார்வை பதிக்க
உனக்கு கண்ணாடி வேண்டாம்
உன்னை விரும்பாத என் மனம் போதும்...
உன்னை வெறுக்க முடியாமல்
வெறுக்கவும் விலகவும் விரும்பினேன்
ஆனாலும் நீ என் தெருகோடியில்....
நீ என்னுள் நுழைய
என் மனகதவின் திறவுகோல் என்னிடம் இல்லை
தொலைத்தேன் என் மனதுடன்
அதையும் என்
விருப்பத்துடன்....
அனுமதி மறுக்கப்பட்ட நீ
எமனிடம் போனாலும் உன்னை மீட்க
நான் உன் சாவித்திரியும் இல்லை...
விளையாட நினைக்கவில்லை உன் வாழ்வில் நான்
விளையாட வராதே என் வாழ்வில் நீயும்
என்றாவது நீ என்னை உணர்ந்தால்
அன்று பெண்ணின் மனது ஒரு புதிராகி போகும் உனக்கு
உன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
இன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே....
அருமையாக இருக்கிறது........
ReplyDeleteபுது முகப்புக்கும் மாறிவிட்டீர்கள் போல...
ஆமாம், புதுமுகப்பு பார்வையிட எளிதாக இருக்கிறது...நன்றி....
Deleteஅருமையாக சொன்னீர்கள்
ReplyDelete//விளையாட நினைக்கவில்லை உன் வாழ்வில் நான்
விளையாட வராதே என் வாழ்வில் நீயும்
என்றாவது நீ என்னை உணர்ந்தால்
அன்று பெண்ணின் மனது ஒரு புதிராகி போகும் உனக்கு
உன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
இன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே//
அற்புதமான வரிகள்
நன்றி...
Deleteஉங்களின் (வலைபூ)முகப்பு பளிச்சுன்னு அழகா இருக்குங்க
ReplyDeletedynamic view நல்லாத்தான் இருக்கிறது....
Deleteநட்பு காதல் இவற்றின் பரினமத்தின் சிதறல்கள் .............அருமை ஒருதலை ..........காதல்
ReplyDeleteமனம் வேறுபடும் போது நட்பை நட்பாகவே பார்ப்பது நல்லது...நன்றி சரளா...
Deleteஅருமையான கவிதை.!
ReplyDeleteநன்றி....
Deleteஉன் வாழ்வை வெறுத்துவிடாதே என்னால்
ReplyDeleteஇன்றே என்னை மன்னித்துவிடு நண்பனே....
உணர்வுகளை வெளிப்படுத்திய வரிகள் அருமை.
நன்றி சசி...
Deleteஉணர்வு வெளிப்படுத்தல் அருமை சொந்தமே...!
ReplyDeleteநன்றி அதிசயா....
Delete