Acrylic Painting By me
Size : 22 x 14 inch
அமரும் பட்டாம்பூச்சியால்
பூவுக்கு சுமையில்லை....
ஆங்காரமாய் ஓடும் ஆற்றினால்
நாணலுக்கு வலியில்லை....
ஆயிரம் கோடி மாந்தரால்
பூமிக்கு வலியில்லை....
சுகிக்கும் ஆண்
பெண்ணுக்கு சுமையில்லை....
உயிர் கொடுக்கும் தாய்க்கு
மகவு சுமையில்லை....
வலிகளால் ஆன வாழ்க்கை
மனிதனுக்கு சுமையில்லை....
எவ்வளவு பெரிய உண்மையை இப்படி எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.//அமரும் பட்டாம்பூச்சியால்
ReplyDeleteபூவுக்கு சுமையில்லை....// அழகான வரி.
நன்றி விச்சு....
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி ஐயா......
Deleteஎல்லாமே சுகமான சுமைகள்...வலிப்பதில்லை
ReplyDeleteபடைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கு நன்றி....
Delete//வலிகளால் ஆன வாழ்க்கை
ReplyDeleteமனிதனுக்கு சுமையில்லை....//
அருமையான உண்மை வரிகள்!.
நன்றி சையத்....
Deleteஅருமையான வரிகள் அகிலா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி......
Deleteஎதுவும் எதற்கும் சுமையில்லை.நல்ல வரிகள்.நல்ல ஆக்கம்.இஷ்டப்பட்டு ஏற்கிற வரைஎல்லாமும் நன்றாகவே இருக்கிறது.கொஞ்ச்சம் சங்கடப்பட்டுப்போகிறபோது,,,,,,,?
ReplyDelete//கொஞ்ச்சம் சங்கடப்பட்டுப்போகிறபோது,,,,,,,?//
ReplyDeleteசுமைகளுக்கும் வலிதான், விமலன்....நன்றி...